Today Panchangam மற்றும் முக்கிய நிகழ்வுகள்- 30 ஆகஸ்ட் 2026: ஆஞ்சனேயருக்கு திருமஞ்சன சேவை

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன், கோவில்களில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை விரிவாக காணலாம்.
Anjaneyar
Published on

இன்றைய பஞ்சாங்கம்

பராபவ ஆண்டு, ஆவணி-13 (ஞாயிற்றுக்கிழமை)

பிறை : தேய்பிறை

திதி : துவிதியை காலை 10.09 மணி வரை பிறகு திருதியை

நட்சத்திரம் : உத்திரட்டாதி மறுநாள் விடியற்காலை 4.58 மணி வரை பிறகு ரேவதி

யோகம் : அமிர்தயோகம்

ராகுகாலம் : மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை

எமகண்டம் : நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை

சூலம் : மேற்கு

நல்ல நேரம் : காலை 7 மணி முதல் 8 மணி வரை, மாலை 3 மணி முதல் 4 மணி வரை

சூரியனார்கோவில் ஸ்ரீ சூரிய நாராயணருக்கு திருமஞ்சன சேவை

சுபமுகூர்த்த தினம். திருத்தணி ஸ்ரீ முருகப் பெருமானுக்கு பால் அபிஷேகம். நாட்டரசன் கோட்டை ஸ்ரீ கண்ணுடைய நாயகி, இருக்கன்குடி ஸ்ரீ மாரியம்மன் கோவில்களில் காலை அபிஷேகம். கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் சந்நிதி எதிரில் உள்ள ஸ்ரீ அனுமனுக்கு திருமஞ்சன சேவை. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் குளக்கரை ஸ்ரீ ஆஞ்சனேயருக்கு திருமஞ்சன சேவை.

சூரியனார்கோவில் ஸ்ரீ சூரிய நாராயணருக்கு திருமஞ்சன சேவை. சாத்தூர் ஸ்ரீ வேங்கடேசப் பெருமாள் புறப்பாடு. ராமேஸ்வரம் ஸ்ரீ பர்வதவர்த்தினியம்மன் ஊஞ்சலில் காட்சி. திருப்போரூர் ஸ்ரீ முருகப்பெருமான் பால் அபிஷேகம். வைத்தீஸ்வரன் கோவில் ஸ்ரீ அங்காரகருக்கும், ஸ்ரீ செல்வமுத்துக் குமார சுவாமிக்கும் அபிஷேகம், அலங்காரம் வழிபாடு. ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ பெரியாழ்வார் புறப்பாடு. தேவக்கோட்டை ஸ்ரீ சிலம்பணி விநாயகர், ஆறுமுகமங்கலம் ஸ்ரீ ஆயிரத்தொன்று விநாயகர் கோவில்களில் காலை அபிஷேகம்.

இன்றைய ராசிபலன்

மேஷம் - பொறுமை

ரிஷபம் - ஆக்கம்

மிதுனம் - ஆதாயம்

கடகம் - நலம்

சிம்மம் - மகிழ்ச்சி

கன்னி - பக்தி

துலாம் - தாமதம்

விருச்சிகம் - போட்டி

தனுசு - வாழ்வு

மகரம் - மகிழ்ச்சி

கும்பம் - வெற்றி

மீனம் - மாற்றம்

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com