Today Panchangam மற்றும் முக்கிய நிகழ்வுகள்- 19 ஆகஸ்ட் 2026: அருப்புக்கோட்டை முத்துமாரியம்மன் அபிஷேகம்

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன், கோவில்களில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை விரிவாக காணலாம்.
அம்மன்
Published on

இன்றைய பஞ்சாங்கம்

பராபவ ஆண்டு, ஆவணி-2 (புதன்கிழமை)

பிறை : வளர்பிறை

திதி : சப்தமி இரவு 10.15 மணி வரை பிறகு அஷ்டமி

நட்சத்திரம் : சுவாதி காலை 10.24 வரை பிறகு விசாகம்

யோகம் : சித்தயோகம்

ராகுகாலம் : நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை

எமகண்டம் : காலை 7.30 மணி முதல் 9 மணி வரை

சூலம் : வடக்கு

நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை, மாலை 4 மணி முதல் 5 மணி வரை

திருத்தணி ஸ்ரீ முருகப் பெருமானுக்கு பால் அபிஷேகம்

மதுரை ஸ்ரீ சொக்கநாதர் தருமிக்கு பொற்கிழியருளிய காட்சி. தங்கச் சப்பரத்திலும் யானை வாகனத்திலும் திருவீதியுலா. விருதுநகர் ஸ்ரீசுவாமி கைலாச வாகனத்திலும் அம்பாள் காமதேனு வாகனத்திலும் பவனி. திருத்தணி ஸ்ரீ முருகப் பெருமானுக்கு பால் அபிஷேகம். திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் சகஸ்ர கலசாபிஷேகம். திருநெல்வேலி சமீபம் நான்காம் நவதிருப்பதி திருபுளிங்குடி ஸ்ரீ பூமிபாலகர், ஸ்ரீ புளியங்குடி வள்ளியம்மை தலத்தில் திருமஞ்சனம்.

கரூரில் ஸ்ரீ அபயபிரதான ஸ்ரீ ரங்கநாதர், பத்ராசலம் ஸ்ரீ ராமபிரான் புறப்பாடு. ஸ்ரீரங்கம் ஸ்ரீ நம்பெருமாள், தேவக்கோட்டை ஸ்ரீ ரங்கநாதர், ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீ வைகுண்டபதி தலங்களில் ஸ்ரீ பெருமாள் புறப்பாடு. விருதுநகர் ஸ்ரீ விஸ்வநாதர், வேதாரண்யம் ஸ்ரீ திருமறைக்காடர் தலங்களில் அபிஷேகம், திருப்பெருந்துறை ஸ்ரீ மாணிக்கவாசகர் புறப்பாடு. திருநாகேஸ்வரம் ஸ்ரீ நாகநாத சுவாமி அபிஷேகம். அருப்புக்கோட்டை ஸ்ரீ முத்துமாரியம்மன் அபிஷேகம்.

இன்றைய ராசிபலன்

மேஷம் - உயர்வு

ரிஷபம் - பக்தி

மிதுனம் - உழைப்பு

கடகம் - பாசம்

சிம்மம் - மேன்மை

கன்னி - சாதனை

துலாம் - அன்பு

விருச்சிகம் - ஆர்வம்

தனுசு - ஆக்கம்

மகரம் - விவேகம்

கும்பம் - சாந்தம்

மீனம் - உவகை

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com