Today Panchangam மற்றும் முக்கிய நிகழ்வுகள்- 17 ஆகஸ்ட் 2026: சிவன் கோவில்களில் சோமவார அபிஷேகம்

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன், கோவில்களில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை விரிவாக காணலாம்.
Sivan
Published on

இன்றைய பஞ்சாங்கம்

பராபவ ஆண்டு, ஆடி-32 (திங்கள்கிழமை)

பிறை : வளர்பிறை

திதி : பஞ்சமி இரவு 8.26 மணி வரை பிறகு சஷ்டி

நட்சத்திரம் : அஸ்தம் காலை 7.43 வரை பிறகு சித்திரை

யோகம் : சித்தயோகம்

ராகுகாலம் : காலை 7.30 மணி முதல் 9 மணி வரை

எமகண்டம் : காலை 10.30 மணி முதல் 12 மணி வரை

சூலம் : கிழக்கு

நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை, மாலை 3 மணி முதல் 4 மணி வரை

குறுக்குத்துறை ஸ்ரீ முருகப்பெருமான் உற்சவாரம்பம்

விருதுநகர் ஸ்ரீ மீனாட்சி சொக்கநாதர் உற்சவாரம்பம். குறுக்குத்துறை ஸ்ரீ முருகப்பெருமான் உற்சவாரம்பம். மதுரை ஸ்ரீ சோம சுந்தரப் பெருமான் நாரைக்கு முக்தியருளிய காட்சி. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் மூலவருக்கு அலங்கார திருமஞ்சன சேவை. சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம். ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீ வைகுண்டபதி பால் அபிஷேகம். கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் சந்நிதியில் ஸ்ரீ கருடாழ்வாருக்குத் திருமஞ்சன சேவை.

நத்தம் வரகுணவல்லித் தாயார் சமேத ஸ்ரீ விஜயாசனப் பெருமாள் திருமஞ்சன சேவை. கோவில்பட்டி ஸ்ரீ செண்பகவல்லி அம்பாள் சமேத ஸ்ரீ பூவண்ணநாதர் அபிஷேகம். திருச்சேறை ஸ்ரீ சாரநாதர் புறப்பாடு. திருமயிலை, திருவான்மியூர், பெசன்ட்நகர், திருவிடைமருதூர் தலங்களில் காலை சிறப்பு சோமவார அபிஷேகம், அலங்காரம் வழிபாடு. திருநெல்வேலி ஸ்ரீ நெல்லையப்பர் கொலு தர்பார் காட்சி.

இன்றைய ராசிபலன்

மேஷம் - நன்மை

ரிஷபம் - ஓய்வு

மிதுனம் - சாந்தம்

கடகம் - பாராட்டு

சிம்மம் - நலம்

கன்னி - இன்பம்

துலாம் - அன்பு

விருச்சிகம் - பக்தி

தனுசு - லாபம்

மகரம் - ஆக்கம்

கும்பம் - தனம்

மீனம் - உற்சாகம்

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com