

பராபவ ஆண்டு, ஆவணி-15 (செவ்வாய்க்கிழமை)
பிறை : தேய்பிறை
திதி : சதுர்த்தி காலை 7.56 மணி வரை பிறகு பஞ்சமி
நட்சத்திரம் : அசுவினி பின்னிரவு 3.32 மணி வரை பிறகு பரணி
யோகம் : சித்தயோகம்
ராகுகாலம் : பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை
எமகண்டம் : காலை 9 மணி முதல் 10.30 மணி வரை
சூலம் : வடக்கு
நல்ல நேரம் : காலை 8 மணி முதல் 9 மணி வரை, மாலை 5 மணி முதல் 6 மணி வரை
திருச்செந்தூர் ஸ்ரீ முருகப் பெருமான் கேடயச் சப்பரத்திலும், இரவு பல்லக்கிலும் திருவீதியுலா. பெருவயல் ஸ்ரீ முருகப்பெருமான் பவனி வரும் காட்சி. சுவாமிமலை முருகப் பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல். திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் கத்தவால் சமஸ்தான மண்டபம் எழுந்தருளல். சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் வெள்ளிப் பாவாடை தரிசனம். திருத்தணி, திருப்போரூர், வடபழனி, குன்றத்தூர், கந்தகோட்டம், வல்லக்கோட்டை முருகர் கோவில்களில் அபிஷேகம், அலங்காரம்.
திருநெல்வேலி சமீபம் 3-ஆம் நவதிருப்பதி செவ்வாய் பகவானுக்குரிய தலமான ஸ்ரீ குமுதவல்லித் தாயார் சமேத வைத்த மாநிதிப் பெருமாள் கோவிலில் திருமஞ்சன சேவை. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ ஆண்டாள் மூலவருக்குத் திருமஞ்சன சேவை. திருநறையூர் ஸ்ரீ சித்தநாதீசுவரர் திருக்கோவிலில் ஸ்ரீ சண்முகருக்கு சத்ரு, சம்ஹார அர்ச்சனை, ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள், ஸ்ரீ ரெங்கமன்னார் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல், ஸ்ரீ வாஞ்சியம் ஸ்ரீ முருகப் பெருமான் பவனி.
மேஷம் - ஆர்வம்
ரிஷபம் - தேர்ச்சி
மிதுனம் - வரவு
கடகம் - உழைப்பு
சிம்மம் - முயற்சி
கன்னி - ஜெயம்
துலாம் - போட்டி
விருச்சிகம் - ஆக்கம்
தனுசு - அனுகூலம்
மகரம் - நன்மை
கும்பம் - மேன்மை
மீனம் - கடமை