பெரம்பூரில் சீனிவாச திருக்கல்யாணம்

சென்னை பெரம்பூர் வேங்கடேஸ்வர பக்த சமாஜம் சார்பில், புரட்டாசி மகோத்சவம் மற்றும் சீனிவாச திருக்கல்யாணம் பெரம்பூரில் உள்ள ரெயில் திருமண மண்டபத்தில் நடந்தது.
பெரம்பூரில் சீனிவாச திருக்கல்யாணம்
Published on

சென்னை பெரம்பூர் பட்டேல் சாலையில் உள்ள வேங்கடேஸ்வர பக்த சமாஜம் சார்பில், புரட்டாசி மகோத்சவம் மற்றும் சீனிவாச திருக்கல்யாணம் பெரம்பூரில் உள்ள ரெயில் திருமண மண்டபத்தில் நடந்தது. இதையொட்டி திருமஞ்சனம், மாப்பிள்ளை அழைப்பு, நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

கருடசேவையுடன் மாப்பிள்ளை அழைப்பு நடந்தது. இதில் திரளான பெண்கள் சீர்வரிசையுடன் ஊர்வலமாக திருமண மண்டபத்தை வந்தடைந்தனர். சீனிவாச திருக்கல்யாணம், திருப்பதியில் நடப்பது போலவே அதே நேரத்தில் நடத்தப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com