சீனிவாசப்பெருமாள் கோவில் ஆனித்திருவிழா கொடியேற்றம்

திண்டுக்கல் மலையடிவாரம் சீனிவாசப்பெருமாள் கோவிலில் இந்த வருட ஆனித்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளாக பக்தர்கள் கலந்து கொண்டனர்.
திண்டுக்கல் சீனிவாச பெருமாள் கோவில் ஆனித்திருவிழாவை முன்னிட்டு கொடியேற்ற நிகழ்ச்சி நடந்தபோது எடுத்த படம்.
திண்டுக்கல் சீனிவாச பெருமாள் கோவில் ஆனித்திருவிழாவை முன்னிட்டு கொடியேற்ற நிகழ்ச்சி நடந்தபோது எடுத்த படம்.
Published on

திண்டுக்கல் மலையடிவாரம் சீனிவாசப்பெருமாள் கோவிலில் வருடந்தோறும் ஆனித்திருவிழா சிறப்புடன் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி இந்த வருட ஆனித்திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று தொடங்கியது. இதையொட்டி காலை 7 மணியளவில் மூலவருக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. அதன்பிறகு 10.30 மணியளவில் நவக்கலச பூஜை, பாராயணம், கருடாழ்வார் பூஜை நடைபெற்று, கொடிமரம் மற்றும் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜை நடந்தது.

அதனைத்தொடர்ந்து கொடியேற்றம் நடைபெற்றது. இதில் கருடாழ்வார் உருவம் பொறிக்கப்பட்ட கொடி, கோவில் கொடி மரத்தில் ஏற்றப்பட்டது. பின்னர் சீனிவாசப்பெருமாள் ஸ்ரீதேவி, பூமாதேவியுடன் சிறப்பு அலங்காரத்தில் காட்சி அளித் தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

இந்த திருவிழாவில் நாள்தோறும் ஒவ்வொரு வாகனத்தில் சுவாமி வீதிஉலா நடக்கிறது. வருகிற 14-ந் தேதி கருட வாகனத்தில் சுவாமி நாகல்நகர் புறப்பாடும், 16-ந் தேதி திருக்கல்யாணமும், 18-ந் தேதி திருத்தேர் நகர்வலம் வருதலும், 20-ந் தேதி தெப்ப உற்சவமும், 21-ந் தேதி ஊஞ்சல் உற்சவமும் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் நரசிம்மன் மற்றும் மண்டகப்படிதாரர்கள் செய்துள்ளனர். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com