ஆவணி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நாளை திறப்பு

சாமி தரிசனம் செய்ய விரும்பும் பக்தர்கள் www.sabarimalaonline.org என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்து வரவேண்டும் என்று திருவிதாங்கூர் தேவசம் போர்டு தெரிவித்துள்ளது.
சபரிமலை கோவில்
சபரிமலை கோவில்
Published on

தினமும் அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டு நிர்மால்ய தரிசனம், அபிஷேகம், கணபதி ஹோமம் உள்ளிட்ட பூஜைகளும், அதனைத்தெடர்ந்து நெய் அபிஷேகம், அஷ்டாபிஷேகம், உச்ச பூஜை, தீபாராதனை, புஷ்பாபிஷேகம் உள்ளிட்ட பூஜைகளும் நடத்தப்படும்.

சபரிமலை ஐயப்பன் கோவில் நடை மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை காலங்கள் மட்டுமின்றி, மாதாந்திர பூஜைக்காக ஒவ்வொரு தமிழ் மாதத்திலும் முதல் 5 நாட்கள் திறக்கப்படும். அந்த நாட்களில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். அதன்படி ஆவணி மாத பூஜைகளுக்காக நாளை (16-ந்தேதி) மாலை 5 மணிக்கு ஐயப்பன் கோவில் நடை திறக்கப்படுகிறது. கோவிலின் தலைமை தந்திரி கண்டரரு பிரம்மதத்தன் முன்னிலையில் சபரிமலை ஐயப்பன் கோவில் மேல்சாந்தி பிரசாத் நம்பூதிரி, நடையை திறக்கிறார்.

நாளை மாலை நடை திறக்கப்பட்ட பிறகு சிறப்பு பூஜைகள் எதுவும் நடக்காது. நாளை மறுநாள்(17-ந்தேதி) மாதாந்திர பூஜை தொடங்குகிறது. அன்று முதல் வருகிற 21-ந்தேதி வரை கோவில் நடை திறந்திருக்கும். இந்த நாட்களில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.

தினமும் அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டு நிர்மால்ய தரிசனம், அபிஷேகம், கணபதி ஹோமம் உள்ளிட்ட பூஜைகளும், அதனைத்தெடர்ந்து நெய் அபிஷேகம், அஷ்டாபிஷேகம், உச்ச பூஜை, தீபாராதனை, புஷ்பாபிஷேகம் உள்ளிட்ட பூஜைகளும் நடத்தப்படும்.

இந்த பூஜைகள் அனைத்திலும் பக்தர்கள் கலந்துகொள்ளலாம் என்பதால் மாதாந்திர பூஜையின் போதும், பக்தர்கள் வருகை அதிகமாக இருக்கும். சாமி தரிசனம் செய்ய விரும்பும் பக்தர்கள் www.sabarimalaonline.org என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்து வரவேண்டும் என்று திருவிதாங்கூர் தேவசம் போர்டு தெரிவித்துள்ளது.

முன்பதிவு செய்த பக்தர்கள் மட்டுமே மாதாந்திர பூஜையில் பங்கேற்க முடியும். ஆவணி மாத மாதாந்திர பூஜை 21-ந்தேதி முடிவடைகிறது. அன்றைய தினம் இரவு 10 மணிக்கு சிறப்பு பூஜைகள் நிறைவடைந்ததும் அரிவராசனம் பாடப்பட்டு கோவில் நடைசாத்தப்படும்.

இதையடுத்து ஓணம் பண்டிகைக்காக வருகிற 24-ந்தேதி மாலை 5 மணிக்கு சபரிமலை ஐயப்பன் கோவில் நடை மீண்டும் திறக்கப்படுகிறது. வருகிற 25-ந்தேதி ஓணம் பூஜைகள் நடக்கின்றன. மறுநாள் (26-ந்தேதி)திருவேணம் சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது. ஓணம் பண்டிகைக்காக வருகிற 24-ந்தேதி முதல் 28-ந்தேதி வரை ஐயப்பன் கோவில் நடை திறந்திருக்கும்.

மாதாந்திர பூஜை மற்றும் ஓணம் பண்டிகையில் பங்கேற்க பக்தர்கள் அதிகளவில் வருவார்கள் என்பதால், நாளை(16-ந்தேதி) முதல் வருகிற 28-ந்தேதி வரை கேரள அரசு போக்குவரத்து கழகம் சார்பில் திருவனந்தபுரம், செங்கன்னூர், பத்தினம் திட்டா, கொட்டாரக்கரை, எருமேலி, புனலூர் உள்ளிட்ட இடங்களில் இருந்து பம்பைக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com