கிருஷ்ணரை வழிபடுவது எப்படி?

கிருஷ்ண ஜெயந்தியான இன்று வீட்டில் கிருஷ்ணரை எப்படி வழிபாடு செய்ய வேண்டும் என்பதை பற்றி விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
கிருஷ்ணரை வழிபடுவது எப்படி?
Published on

கிருஷ்ண பரமாத்வை எப்படி வழிபட வேண்டும் தெரியுமா?

ஸ்ரீகிருஷ்ண பூஜை செய்வதற்கு முன் வழிபடுவர் நடுவிரலால் விஷ்ணுவைப் போல் இரண்டு நேர் கோடுகளை வரையவும் அல்லது அடர்த்தியான ஒரு நேர் கோட்டை வரையவும்.

ஸ்ரீ கிருஷ்ணனுக்கு மோதிர விரலில் சந்தனம் இட வேண்டும்.

கிருஷ்ணகமல் பூவால் அர்ப்பணம் செய்ய வேண்டும்.

மூன்று அல்லது மூன்றின் பெருக்குத் தொகை எண்ணிக்கை உள்ள பூக்களை அர்ப்பணிக்க வேண்டும்.

அர்ப்பணம் செய்யும் போது பூவின் காம்பு கிருஷ் ணனை நோக்கியிருக்க வேண்டும்.

பூக்களை நீள்வட்ட வடிவத்தில் அலங்கரிக்க வேண்டும்.

சந்தனம், தாழம்பூ, மல்லிகை, சம்பா, சாய்வாலா, ஆம்பர் மணம் கொண்ட ஊதுபத்தியை உபயோகிக்க வேண்டும்.

வாசனை திரவியங்களில் சந்தனம் உபயோகிக்க வேண்டும்.

ஸ்ரீ கிருஷ்ணனை மூன்று முறை அல்லது மூன்றின் பெருக்கல் தொகை எண்ணிக்கை பிரதட்சணம் செய்ய வேண்டும்.

கிருஷ்ண பகவான் அஷ்டமி திதியில், ஸ்ராவண மாதத்தில் கிருஷ்ண பட்சத்தில் நடுஇரவில், ரோகிணி நட்சத்திரத்தில் வ்ருஷப ராசியில் பிறந்தார்.

கோகுலாஷ்டமி திதியில், கிருஷ்ண தத்துவம் இப்பூவுலகில் 1000 மடங்கு அதிகம் ஆகியுள்ளது. மீதி நாட்களைக்காட்டிலும் அன்றைக்கு கிருஷ்ண தத்துவம் அதிக செயலாற்றலைக் கொண்டிருப்பதால் ‘ஓம் நமோ’ பகவதே வாசுதேவாய’ என நாமஜபம் செய்தால் கிருஷ்ணரின் அருள் நமக்கு அதிக பலனைக் கொடுக்கும்.

கோபாலன்

‘கோ’ என்ற வடமொழிச் சொல்லுக்கு ‘பசு’ என்று பொருள். உண்மையில் எல்லா ஜீவராசிகளும் பசுக் கூட்டமே! இவற்றை பரிபாலிப்பதால் கிருஷ்ணனுக்கு ‘கோபாலன்’ என்ற பெயர் ஏற்பட்டது. கண்ணனின் ‘மாடு மேய்த்தல்’ என்ற திருவிளையாடலின் உட்பொருள் இதுவே! மேலும் ‘மனம்’ என்பது காடு. இதில் தீயகுணங்களென்ற கொடூர மிருகங்கள் நடமாடுகின்றன. அதே உள்ளத்தில் கிருஷ்ணன் புகுந்துவிட்டால் அந்த மனம், ‘பிருந்தாவனம்’ ஆகிவிடும். தீய குணங்கள், நற்பண்புகள் என்னும் பூக்களாகவும் துளசி தளங்களாகவும் மாறும். அதை ‘வனமாலி’ எனப்படும் வாசுதேவன் ஏற்று மகிழ்வார்.

வீட்டிற்கு வரும் கண்ணன்

பாகவதத்தில் கண்ணனின் பிறப்பை விவரிக்கும் தசம ஸ்கந்தம் எனப் படும் பத்தாவது அத்தி யாயத்தை ஒருவர் படிக்க, குடும்பத்தில் மற்றவர்கள் கேட்க வேண்டும். இதனால் பகவான் கிருஷ்ணரின் ஆசீர்வாதம் நமது இல்லத்திற்கும், உள்ளத்திற்கும் கிடைக்கும்.

கிராமங்களில் மாலை வேளையில் தான் கிருஷ்ண ஜெயந்தி பூஜை செய்வார்கள். வீட்டில் பூஜையும் நைவேத் தியமும் செய்து முடித்தபிறகு அருகே உள்ள கண்ணன் ஆலயத்துக்குச் சென்று இறைவனை வணங்கி, அங்கு நடத்தும் உறியடி, வழுக்கு மரம் ஏறுதல் ஆகியவற்றைக் கண்டு மகிழ்வது சிறப்பு.

தசம ஸ்காந்தம் படித்தால் ஆண் குழந்தை பிறக்கும்

கிருஷ்ண ஜெயந்தியன்று பிள்ளை பேறு இல்லாதவர்கள் ஸ்ரீமத் பாகவதத்தில் உள்ள தசம ஸ்காந்தம் படித்து பாராயணம் செய்தால், அழகான ஆண் குழந்தை பிறக்கும் என்னும் நம்பிக்கை உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com