பலவிதமான பிரச்சினைகளுக்கு தீர்வு தரும் கும்பகோணம் கோவில்கள்

கும்பகோணத்தில் நவக்கிரக தோஷம் நீங்க, திருமணத் தடை அகல என்று பலவிதமான பிரச்சினைகளுக்கும் ஆலயங்கள் இருக்கின்றன. கும்பகோணத்தில் எந்த பிரச்சனை தீர எந்த கோவிலை வழிபட வேண்டும் என்று பார்க்கலாம்.
பலவிதமான பிரச்சினைகளுக்கு தீர்வு தரும் கும்பகோணம் கோவில்கள்
Published on

தமிழ்நாட்டில் ஆலயங்கள் கொண்ட நகரங்கள் பல இருக்கின்றன. அவற்றில் காஞ்சிபுரமும், கும்பகோணமும் முக்கியமானவை. இந்த இரண்டு நகரங்களிலும் உள்ள கோவில்களின் எண்ணிக்கை ஏராளம். அவற்றிலும் கும்பகோணம் தோஷங்களைப் போக்கும் ஆலயங்களை அதிகமாகக் கொண்டிருக்கிறது. இங்கு நவக்கிரக தோஷம் நீங்க, திருமணத் தடை அகல என்று பலவிதமான பிரச்சினைகளுக்கும் ஆலயங்கள் இருக்கின்றன. குழந்தைப் பிறப்பு முதல் சதாபிஷேகம் வரை பலனடைய கும்பகோணத்தில் கோவில்கள் இருக்கின்றன. அவற்றைப் பற்றி இங்கே பார்க்கலாம்.

கரு உருவாக (புத்திரபாக்கியம்) - கருவளர்ச்சேரி

கரு பாதுகாத்து சுகப்பிரசவம் பெற - திருக்கருக்காவூர்

நோயற்ற வாழ்வு பெறுவதற்கு - வைத்தீஸ்வரன் கோவில்

ஞானம் பெற - சுவாமிமலை

கல்வி மற்றும் கலைகள் வளர்ச்சிக்கு - கூத்தனூர்

எடுத்த காரியம் வெற்றி பெற - பட்டீஸ்வரம்

உயர் பதவியை அடைய - கும்பகோணம் பிரம்மன் கோவில்

செல்வம் பெறுவதற்கு - உப்பிலியப்பன் கோவில்

கடன் நிவர்த்தி பெற - திருச்சேறை சரபரமேஸ்வரர்

இழந்த செல்வத்தை மீண்டும் பெற - திருவிடைமருதூர் மகாலிங்கசுவாமி

பெண்களுக்கு ருது பிரச்சினை தீர - கும்பகோணம் காசி விஸ்வநாதர் (நவ கன்னிகை)

திருமணத்தடைகள் நீங்க - திருமணஞ்சேரி

நல்ல கணவனை அடைய - கும்பகோணம் ஆதி கும்பேஸ்வரர் உடனாய மங்களாம்பிகை

மனைவி, கணவன் ஒற்றுமை பெற - திருச்சத்திமுற்றம்

பிரிந்த தம்பதிகள் ஒன்று சேர - திருவலஞ்சுழி

பில்லி சூனியம் செய்வினை நீக்க - அய்யாவாடி ஸ்ரீ பிரத்தியங்கிர தேவி

கோர்ட்டு வழக்குகளில் நியாயம் வெற்றியடைய - திருபுவனம் சரபேஸ்வரர்

பாவங்கள் அகல - கும்பகோணம் மகாமகத் திருக்குளத்தில் நீராடல்

எம பயம் நீங்க - ஸ்ரீ வாஞ்சியம்

நீண்ட ஆயுள் பெற - திருக்கடையூர்

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com