தினமும் 3 முறை துதி சொல்லுங்கள்

மலர்களை தீபத்தில் சமர்ப்பித்து தனியாக புஷ்பாஞ்சலியை ஸ்ரீசக்கரத்துக்குச் செய்தல் வேண்டும்.ஸ்ரீசக்கரத்தை வழிபடுபவருக்கு தீமைகள் அகன்று சுகயோகங்கள் அதிகரிக்கும்.
தினமும் 3 முறை  துதி சொல்லுங்கள்
Published on

தினமும் மூன்று முறை கீழ்கண்ட மந்திரத்தை சொல்லி ஸ்ரீசக்கரத்தை வணங்கலாம்.

அன்னையே போற்றி! ஞாலத்து அல்லலை ஒழிப்பாய் போற்றி!

துன்னியே எம்பால் அன்பு சுலவ அவ்வுணர்த் தேய்த்து

நன்னிலப் பொறை தீர்க்கின்ற நாயகி போற்றி! நல்லோர்க்கு

உன்னரும் இன்பம் ஈயும் ஒளி மலர்க் கண்ணாய் போற்றி!

மலர்களை தீபத்தில் சமர்ப்பித்து தனியாக புஷ்பாஞ்சலியை ஸ்ரீசக்கரத்துக்குச் செய்தல் வேண்டும்.

சிவசக்கரம் நான்கும் வடதிசையை நோக்க தேவியுடன் ஐந்து வட்டம் தென்புறமே பார்க்க பவமான உடலுலகமாக பரிகார பிண்டாண்ட யோனியதுவாக சிவயுவதி அஷ்ட வசு எண் தளங்களாக சேர்ந்தகலை ஈரெட்டு மேல் தளங்களாக நவமான மூவட்டம் முக்கோடு நால்வாய் நாற்பத்து நான்காகி ஸ்ரீசக்ர மானாய் வாசனை மலர்களை இட்டு ஆரத்தி காட்டியபின் ஆத்ம பிரதட்சிணம் செய்து நமஸ்கரித்து ஸ்ரீசக்கரத்தில் உள்ள குங்குமத்தை வகிட்டிலும், நெற்றியிலும், திருமாங்கல்யத்திலும் பெண்கள் வைத்துக்கொள்ள வேண்டும்.

பிறகே மஞ்சள் குங்குமம் தட்டில் கரைத்து ஆரத்தி எடுத்து வாசலில் ஓரமாகக் கொட்ட வேண்டும்.

ஸ்ரீசக்கரத்தை வழிபடுபவருக்கு தீமைகள் அகன்று சுகயோகங்கள் அதிகரிக்கும்.

X

Maalai Malar
www.maalaimalar.com