சிவபெருமானுக்குரிய நட்சத்திரம் என்ன?

மார்கழி மாத திருவாதிரை நட்சத்தி நாளில் எல்லா சிவாலயங்களில் ஆருத்ரா தரிசனம் சிறப்பாக நடைபெறும். பிறப்பே எடுக்காத சிவபெருமானுக்கு பிறந்த நட்சத்திரம் திருவாதிரை என்கிறார்களே?
சிவபெருமானுக்குரிய நட்சத்திரம் என்ன?
Published on

பிறப்பே எடுக்காத (ஆதியும் அந்தமும் இல்லாத பரம்பொருளுக்கு) சிவபெருமானுக்குஉரிய நட்சத்திரம் திருவாதிரை என்கிறார்களே எப்படி?

தமிழ் மொழியில் திருவாதிரை என்று கூறப்படும் நட்சத்திரத்திற்கு வடமொழியில் ஆருத்ரா என்று பெயர்.

இதுவே ஆருத்ரா எனப்படுகிறது.

மார்கழி மாத திருவாதிரை நட்சத்தி நாளில் எல்லா சிவாலயங்களில் ஆருத்ரா தரிசனம் சிறப்பாக நடைபெறும்.

பிறப்பே எடுக்காத சிவபெருமானுக்கு பிறந்த நட்சத்திரம் திருவாதிரை என்கிறார்களே?

பிறவா யாக்கைப் பெற்றோன் பெரியோன் என்று சங்க இலக்கியமான சிலப்பதிகாரம் சிவ பெருமானைக் குறிக்கிறது.

சிவபெருமானின் நட்சத்திரம் திருவாதிரை ஆனது பற்றி புராண செய்திகள் உள்ளன.

சேந்தனார் வீட்டுக்கு களியுண்ண நடராஜப் பெருமான் வந்த அந்த தினம், ஒரு மார்கழி மாத திருவாதிரை நாள் இதை உணர்த்தும் வகையில், இன்றும் ஆதிரை நாளில் தில்லை நடராஜப் பெருமானுக்கு களி படைக்கப் படுகிறது.

இதனால் சிவபெருமானின் நட்சத்திரம் திருவாதிரை ஆனது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com