அனுமனுக்கு வெண்ணெய் காப்பு

தேவர்கள் கூடி ஆலோசித்தபோது, அசுரர்களின் ஆணவத்தை அடக்கத் தகுதியானவர் அனுமன் ஒருவரே என்று முடிவு செய்யப்பட்டது.
Hanuman
Published on: 
Summary

ராவண வதம் செய்யப்பட்ட பிறகு 2 அசுரர்கள் மட்டும் தப்பி ஓடி தவம் செய்து, வரங்களைப் பெற்று தேவர்களை மிரட்டினர்.

ஆஞ்சநேயருக்கு வெண்ணெய்க் காப்பு செய்து வேண்டினால் வாழ்க்கையின் துன்பங்களெல்லாம் அந்த வெண்ணைய் போலவே உருகிப் போகும் என்பார்கள் பெரியவர்கள்.

இதற்கு ஒரு வரலாறு சொல்லப்படுகிறது. ராவண வதம் செய்யப்பட்ட பிறகு 2 அசுரர்கள் மட்டும் தப்பி ஓடி தவம் செய்து, வரங்களைப் பெற்று தேவர்களை மிரட்டினர். அவர்களை எப்படி சமாளிப்பது? என்று தேவர்கள் பயந்து கொண்டிருந்தனர். இதுகுறித்து தேவர்கள் கூடி ஆலோசித்தபோது, அசுரர்களின் ஆணவத்தை அடக்கத் தகுதியானவர் அனுமன் ஒருவரே என்று முடிவு செய்யப்பட்டது.

ஸ்ரீராமர்

ஸ்ரீராம, ராவண யுத்தத்தின்போது அனுமனுக்கு ஸ்ரீராமர் வில்லையும், பிரம்மாவும், சிவபெருமானும் இன்னும் பிற கடவுள்களும் அனுமனுக்கு சக்தி வாய்ந்த ஆயுதங்களை அளித்தார்கள். தப்பிய அசுர வேட்டைக்காக அனுமன் ஸ்ரீராமரை வழிபட, ஸ்ரீராமர் தனது அடுத்த அவதாரமான கிருஷ்ணனுக்குப் பிடித்த வெண்ணெயை அனுமனிடம் அளித்து, ‘இந்த வெண்ணெய் உருகுவதற்குள் உனது காரியம் வெற்றியடையும்’ என்று கூறி ஆசீர்வதித்தார்.

அனுமன்

அதன்படியே, அனுமன் அந்த வெண்ணெய் உருகுவதற்குள் இரண்டு அசுரர்களையும் அழித்து விட்டார்.

அதுபோல, நாமும் அனுமனுக்கு வெண்ணெய் சாத்தி வழிபட்டால், நாம் சாத்திய வெண்ணெய் உருகுவதற்குள் நாம் வேண்டிய காரியங்கள் அனைத்தும் கைகூடும் என்பதே இதன் உண்மைக் காரணமாகும்.

X

Maalai Malar
www.maalaimalar.com