ஏகாதசி பூஜை

பவுர்ணமியில் இருந்து ஆரம்பித்து அமாவாசை வரை உள்ள திதிகள் தேய்பிறை திதிகள். இது கிருஷ்ண பட்சம் எனப்படும்.
ஏகாதசி பூஜை
Published on

நாகலாபுரம் வேதநாராயணன் பெருமாள் ஆலயத்தில் ஏகாதசி நாட்களில் சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகின்றன.

அன்று மூலவர் மச்ச அவதார பெருமாளுக்கு செய்யப்படும் பூஜைகளை பார்த்து தரிசிக்க நீண்ட தூரத்தில் இருந்து எல்லாம் பக்தர்கள் வருகிறார்கள். அந்த அளவுக்கு இந்த தலத்தின் ஏகாதசி பூஜை சிறப்பு பெற்றுள்ளது.

எனவே ஏகாதசி பற்றி தெரிந்து கொள்ள வேண்டும்.

ஏகாதசியை விட உயர்ந்த விரதம் வேறு ஏதும் இல்லை என்பது ஆன்றோர் வாக்கு. எந்த நிலையிலும் ஏகாதசி விரதத்தை மேற்கொள்ளலாம்.

பதினைந்து நாட்கள் கொண்டது ஒரு பட்சம். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு திதிக்கு உரியது.

அமாவாசையில் இருந்து ஆரம்பித்து பவுர்ணமி வரை உள்ள திதிகள் வளர்பிறை திதிகள். இது சுக்ல பட்சம் எனப்படும்.

பவுர்ணமியில் இருந்து ஆரம்பித்து அமாவாசை வரை உள்ள திதிகள் தேய்பிறை திதிகள்.

இது கிருஷ்ண பட்சம் எனப்படும்.

இந்த இரண்டு பட்சங்களில் ஒவ்வொன்றிலும் 11வது நாளில் வரும் திதி ஏகாதசி திதி.

ஏகம்+தசம்= அதாவது 1+10=11 என்பதுதான் ஏகாதசி திதி.

இந்த பதினொன்றாம் திதிக்கு மட்டும் ஏன் இத்தனை சிறப்பு? ஒவ்வொரு திதிக்கும் ஒவ்வொரு தேவதை உண்டு.

அவ்வாறு ஏகாதசி திதிக்கு உரிய தேவதை தர்மம் ஆகும்.

அதனால் இந்த திதியை 'தர்மதிதி' என்றும் கூறுவது உண்டு.

எனவே தர்ம திதியாகிய ஏகாதசி விரதத்தை ஒருவர் தவறாது பின்பற்றினால் தர்மத்திற்கு வளர்ச்சி ஏற்படும்.

அதனால் விரதம் இருப்பவர்கள் பாவங்கள் நீங்கி மேன்மை அடைவார்கள்.

கர்ம மேந்திரியங்கள் 5, ஞானேந்திரியங்கள் 5, மனம் 1 ஆகிய இந்தப் பதினொன்றாலும் செய்யப்படும் தீவினைகள், இந்த ஏகாதசி விரதம் இருப்பதால் அழியும்.

ஏற்கனவே செய்த தீவினைகள் அழிந்துவிடும்.

பெருமாளை வணங்குகிறோம். இனி தீவினைகள் செய்ய மாட்டோம் என்பதை அவ்வப்போது மறந்துவிடாமல் உறுதியுடன் இருக்க ஏகாதசி விரதம் முக்கியமானதாகும்.

ஓர் ஆண்டிற்கு இருபத்து நான்கு பட்சங்கள். இருபத்து நான்கு பட்சங்களுக்கு ஏகாதசிகள்.

ஆனால் சில ஆண்டுகளில் 24 வருடங்களுக்கு மேலும் சில நாட்கள் வரும்.

எனவே சில ஆண்டுகளில் 25 ஏகாதசிகள் வரும்.

இந்த ஏகாதசிகளின் வரிசை மார்கழி மாதம் தேய்பிறை பகுதியில் ஆரம்பித்து அடுத்து வரும் கார்த்திகை மாத வளர்பிறைப் பகுதியில் முடிவடைகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com