கால சர்ப்ப தோஷம் நீங்கும் பரிகாரம்

சர்ப்ப கிரகங்களுக்கு இடையில் மற்ற கிரகங்கள் அமைவது கால சர்ப்ப தோஷம் ஆகும்.கீழ்புறமாக கால சர்ப்ப தோஷம் அமைய பெற்றவர்கள் விதியை மாற்ற முடியாது.
கால சர்ப்ப தோஷம் நீங்கும் பரிகாரம்
Published on

ராகு, கேது என்னும் சர்ப்ப கிரகங்களுக்கிடையில் மற்ற கிரகங்கள் அமைவது காலசர்ப்பதோஷம் ஆகும். இத்தோஷம் இருப்பவர்களுக்கு திருமண தடை, பிள்ளைப்பேரின்மை போன்ற தடைகள் ஏற்படும். அரசியல் தலைவர்களுக்கு இத்தோஷம் இருப்பின் சாண் ஏறினால் முழம் சறுக்கும்.

(மொத்தம் உள்ள 12 கட்டங்களில்) மேல்புறமாக கால சர்ப்ப தோஷம் அமையப் பெற்றவர்கள் இறைவனை தொடர்ந்து வழிபட தடைகளை வென்று நல்வாழ்வு பெறுவார்கள். அதனால் இவர்கள் கவலைப்பட வேண்டியதில்லை.

கீழ்புறமாக கால சர்ப்ப தோஷம் அமைய பெற்றவர்கள் இயற்கையாய் அமைந்த விதியை மாற்ற முடியாது என்கிறது ஜோதிட விதி. இருப்பினும் இந்தக் கால சர்ப்ப தோஷத்திற்கு சங்கரன்கோவிலில் உள்ள ஸ்ரீ சங்கரநாராயண சுவாமி திருக்கோவிலில் உள்ள புற்றீஸ்வரருக்கு பால் பாயாசம் நைவேத்யம் செய்து தாத்தா முதல் இப்போது உள்ள பேரன் வரை அவர்களது பெயர்களுக்கு அர்ச்சனை செய்து வழிபட "கீழ்புற கால சர்ப்ப தோஷம் குறைகிறது'' என்று பெரியோர்கள் கூறி உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com