

ஹாலிவுட் நடிகையான மார்கரெட் குவாலி தனது அடுத்த படமான ‘தி டாக் ஸ்டார்ஸ்’ வெளியீட்டின் பிரீமியர் நிகழ்ச்சியில் செருப்பு அணியாமல் வெறுங்காலுடன் வந்து கலந்து கொண்ட நிகழ்வு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
அமெரிக்க நடிகையான 31 வயதான மார்கரெட் குவாலி கதா நாயகியாக தி டாக் ஸ்டார்ஸ் திரைப்படத்தில் நடிகர் ஜேக்கப் எல்ரோடியுடன் நடித்துள்ளார்.
கிளாடியேட்டர்ஸ் முதல் பாகம், இரண்டாம் பாகம் மற்றும் நெப்போலியன் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய ரிட்லெ ஸ்காட், இந்த தி டாக் ஸ்டார்ஸ் திரைப்படத்தை இயக்கியுள்ளார்.
இந்த திரைப்படத்தில் ஜேக்கப் எல்ரோடி, ஜோஷ் ப்ரோலின், அலிசன் ஜானி மற்றும் பெனடிக்ட் வோங் ஆகியோர் நடித்துள்ளனர்.
இந்த திரைப்படம் அமெரிக்காவில் வரும் 28-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதற்கிடையே இங்கிலாந்தில் நடைபெற்ற தி டாக் ஸ்டார்ஸ் திரைப்படத்தின் முன்னோட்ட நிகழ்வில், திரைப்படத்தில் நடித்த நட்சத்திரங்கள் கலந்துகொண்டனர்.
அப்போது அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும் வகையில், கருப்பு நிற உடையுடன் வந்த நடிகை மார்கரெட் குவாலி, செருப்பு அணியாமல் வெறுங்காலுடன் வந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
அவர் அணிந்திருந்த முழுவதும் வட்ட வடிவ விளிம்புகளால் அலங்கரிக்கப்பட்ட V-வடிவ கழுத்துடைய ஒரு பாரம்பரியமான உடையில் நிகழ்ச்சிக்கு வந்திருந்தார்.
இந்த சிவப்பு கம்பள நிகழ்விற்காக, சமூக வலைதளங்களில் பிரபலமாக அறியப்படுகின்ற வெறுங்கால் குதிகால் செருப்புகளை அணிந்து வந்து தைரியமாக நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.
வெறுங்கால் ஹீல்ஸ்
நடிகை அணிந்து வந்த ‘வெறுங்கால் ஹீல்ஸ்’ என்று பெயரிடப்பட்டுள்ள செருப்பின் வடிவம், ஒரு சிறிய தோல் குதிங்கால் மூடியுடன் மட்டுமே வடிவமைக்கப்பட்டிருந்தது.
பிரான்சில் உள்ள பியாரிட்ஸ் நகரில், பிரபல ஆடை வடிவமைப்பாளரான மேத்யூ பிளேஸி, முதன்முதலில் இந்த ஒப்பனையை அறிமுகம் செய்திருந்தார்.
மேலும் இந்த வடிவமைப்பை ஆடம்பர பிராண்டிற்காக தனது 2027 ரிசார்ட் கலெக்ஷனை வழங்கி இருந்தது குறிப்பிடத்தக்கது.