புதுவையில் ஆடைகளை கழற்றி போலீசார் அவமானப்படுத்தியதால் வாலிபர் வி‌ஷம் குடித்து தற்கொலை முயற்சி

ஆடைகளை கழற்றி போலீசார் அவமானப்படுத்தியதால் வாலிபர் வி‌ஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவத்தால் புதுவையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கோப்பு படம்
கோப்பு படம்
Published on

புதுச்சேரி:

புதுவை வீராம்பட்டினம் தெப்பக்குளம் வீதியை சேர்ந்தவர் பெரியாண்டி (வயது 68). புதுவை வருமான வரித்துறை அதிகாரியாக பணிபுரிந்து ஓய்வு பெற்றவரான இவர், மாற்றுத்திறனாளி ஆவார்.

இவரது மகன் சுந்தர மூர்த்தி (35). இவர் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து தற்போது வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்தார்.

இதற்கிடையே பெரியாண்டிக்கும், சுந்தரமூர்த்திக்கும் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது.

அதுபோல் நேற்று மாலையும் அவர்களிடையே தகராறு ஏற்பட்டது. அப்போது பெரியாண்டி இது குறித்து அரியாங்குப்பம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் சுந்தரமூர்த்தியை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

அப்போது சுந்தரமூர்த்தியின் ஆடைகளை கழற்றி தாக்கியதாகவும் கூறப்படுகிறது. மேலும் இதனை செல்போனில் பதிவு செய்து இனிமேல் தந்தையிடம் தகராறு செய்தால் வாட்ஸ்-அப்பில் வெளியிடுவோம் என்று போலீசார் மிரட்டியதாக தெரிகிறது.

பின்னர் வழக்குப் பதிவு எதுவும் செய்யாமல் சுந்தரமூர்த்தியை போலீசார் விடுவித்து விட்டனர்.

இதையடுத்து வீட்டுக்கு வந்த சந்திரசேகர் போலீசார் ஆடைகளை கழற்றி அவமானப்படுத்தியதால் விரக்தி அடைந்தார். தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்த அவர் வீட்டில் இருந்த எலிமருந்தை (வி‌ஷம்) தின்று விட்டார்.

இதனால் சுந்தரமூர்த்தி மயங்கி விழுந்தார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர் சுந்தரமூர்த்தியை உடனடியாக மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

போலீசார் ஆடைகளை கழற்றி அவமானப்படுத்தியதால் வாலிபர் வி‌ஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் புதுவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com