திருத்தணியில் மான்கறியுடன் வாலிபர் கைது

திருத்தணியில் மான் கறி வைத்திருந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
திருத்தணியில் மான்கறியுடன் வாலிபர் கைது
Published on

பள்ளிப்பட்டு:

திருத்தணி பகுதியில் சிலருக்கு மான்கறி கிடைப்பதாக மாவட்ட வன அலுவலர் முகமது ‌ஷகீப்புக்கு தகவல் கிடைத்தது. அவரது உத்தரவுப்படி திருத்தணி வனச்சரகர் வாசு தலைமையில் அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

அவர்கள் சென்னை- திருப்பதி சாலையில் மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபரை நிறுத்தி விசாரணை நடத்தினர். அவர் திருத்தணியை அடுத்த காசிநாதபுரத்தை சேர்ந்த முருகன் என்பதும் அவர் வைத்திருந்த பையில் 2 கிலோ மான் கறி இருந்ததும் தெரிந்தது.

இதையடுத்து முருகனை கைது செய்தனர். அவர் ஆந்திர மாநிலம் சித்தூரில் இருந்து மான்கறி வாங்கி வந்ததாக தெரிவித்து உள்ளார். மானை வேட்டையாடுபவர்கள் குறித்து அங்குள்ள வன அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com