யோகி ஆதித்யாநாத், ராகுல் காந்தி நாளை கோரக்பூர் பயணம்

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் 70 பச்சிளம் தளிர்கள் பலியான கோரக்பூர் நகருக்கு அம்மாநில முதல்-மந்திரி யோகி ஆதித்யாநாத் மற்றும் ராகுல் காந்தி ஆகியோர் நாளை செல்கின்றனர்.
யோகி ஆதித்யாநாத், ராகுல் காந்தி நாளை கோரக்பூர் பயணம்
Published on

உத்தரப்பிரதேசம் மாநிலம், கோராக்பூரில் உள்ள பாபா ராகவ் தாஸ் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை காரணமாக ஆறு நாட்களில் 70-க்கும் மேற்பட்ட குழந்தைகள் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது.

மாநில அரசின் இந்த மெத்தனப்போக்கை கண்டித்து பலர் குரல் எழுப்பி வருகின்றனர். இவ்விவகாரத்தில் வரும் 29-ம் தேதிக்குள் விளக்கம் அளிக்குமாறு உத்தரப்பிரதேசம் மாநில அரசுக்கு அலகாபாத் ஐகோர்ட் இன்று நோட்டீஸ் அனுப்பியுள்ளது.


இந்நிலையில், கோரக்பூர் நகருக்கு அம்மாநில முதல் மந்திரி யோகி ஆதித்யாநாத் மற்றும் காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் நாளை செல்கின்றனர்.

கோரக்பூர் நகரில் உள்ள அந்தாயாரி பாக் பகுதியில் முதல்-மந்திரி யோகி ஆதித்யாநாத் தீவிர தூய்மை மற்றும் சுகாதார இயக்கத்துக்கான பிரசாரத்தை தொடங்கி வைக்கிறார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com