யெஸ் வங்கி நிறுவனர் ராணா கபூருக்கு 11-ம் தேதி வரை விசாரணை காவல்

பணமோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் கைதான யெஸ் வங்கி நிறுவனர் ராணா கபூரை வரும் 11-ம் தேதி அமலாக்கத்துறை அதிகாரிகள் காவலில் வைத்து விசாரிக்க மும்பை நீதிமன்றம் அனுமதித்துள்ளது.
ராணா கபூர்
ராணா கபூர்
Published on

மும்பை:

மேலும், வங்கி கணக்கில் இருந்து  வாடிக்கையாளர்கள் ரூ.50 ஆயிரம் மட்டுமே எடுக்க வேண்டும் என்றும் மறுஉத்தரவு வரும்வரை இந்த கட்டுப்பாடுகளை கடைபிடிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது. வங்கியின் நிர்வாகத்தையும் உடனடியாக மாற்றி அமைக்கவும் உத்தரவிட்டது.

இதையடுத்து, யெஸ் வங்கி நிறுவனர் ராணா கபூர் மீது பணமோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை இயக்குனரகம் வழக்குப்பதிவு செய்தது.
 
இந்நிலையில், பணமோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் யெஸ் வங்கி நிறுவனர் ராணா கபூரை அமலாக்கத்துறை இயக்குனரகம் நேற்று கைது செய்தது.

X

Maalai Malar
www.maalaimalar.com