சவுதி அரேபியா நாட்டின் விமான நிலையம் மீது ஹவுத்தி போராளிகள் தாக்குதல்

சவுதி அரேபியா நாட்டின் நர்ஜான் நகர விமான நிலையம் மீது ஹவுத்தி போராளிகள் இன்று அதிரடியாக தாக்குதல் நடத்தினர்.
சவுதி அரேபியா நாட்டின் விமான நிலையம் மீது ஹவுத்தி போராளிகள் தாக்குதல்
Published on

ரியாத்:

சவுதி அரேபியா மற்றும் ஏமன் நாட்டின் எல்லைப்பகுதியில் சவுதிக்கு சொந்தமான நர்ஜான் மாகாணம் அமைந்துள்ளது. இந்த மாகாணத்தின் தலைநகரான நர்ஜான் நகர விமான நிலையம் மீது ஹவுத்தி போராளிகள் இன்று ஏவுகணைகளை வீசி அதிரடியாக தாக்குதல் நடத்தினர்.

வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட காசிப்-கே2 ரக ஆளில்லா விமானங்களை ஏவி விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சவுதி விமானப்படை போர் விமானங்களை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக சவுதி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com