

சீன அதிபராக ஜி ஜின்பிங் (64). கடந்த 2012-ம் ஆண்டு நவம்பர் 15-ந்தேதி பதவி ஏற்றார். இவர் சீன மக்களின் ஆதரவு பெற்ற தலைவராக திகழ்கிறார். இந்த நிலையில் அவர் சீனாவில் மேலும் 5 ஆண்டுகள் அதிபராக பதவியில் தொடர ஒப்புதல் வழங்கப்பட்டது.
மேலும் சீன கம்யூனிஸ்டு கட்சியின் அரசியல் சாசனத்தில் திருத்தம் செய்து ஜி ஜின்பிங்கின் பெயரையும், சித்தாந்தமும், சேர்க்கப்பட்டது. சீன கம்யூனிஸ்டு மாநாட்டில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
அதை தொடர்ந்து இன்று அவர் 2-வது தடவையாக சீன அதிபராக பதவி ஏற்றார். அவருடன் பிரதமர் லீ கெகியாங் மற்றும் 5 புதிய பொலிட்பீரோ கமிட்டியும் பொறுப்பு ஏற்றது.
இந்த நிகழ்ச்சி பெய்ஜிங்கில் உள்ள மக்கள் பெருமன்றத்தில் நடந்தது. முன்னதாக அதிபர் ஜி ஜின்பிங், பிரதமர் லீ கெகியாங் மற்றும் 5 புதிய பொலிட் பீரோ நிலைக்குழு உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றாக நடந்து வந்தனர்.
2-வது தடவை அதிபராக பதவி ஏற்ற பின் ஜி ஜின்பிங் நாட்டு மக்களுக்கு உரை நிகழ்த்தினார்.