உடற்பயிற்சியின்போது ஜிம்-ல் இருந்து கீழே விழுந்து உயிரிழந்த பெண் - வீடியோ

நிலை தடுமாறிய அப்பெண் ஜிம் கட்டிடத்தின் 3-வது மாடியில் இருந்து கீழே விழுந்தார். தலையில் பலத்த காயங்களுடன் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
உடற்பயிற்சியின்போது ஜிம்-ல் இருந்து கீழே விழுந்து உயிரிழந்த பெண் -  வீடியோ
Published on

இந்தோனேசியாவில் 22 வயது இளம்பெண் ஒருவர் டிரெட்மில்லில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் தொடர்பான வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது.

இந்தோனேசியாவின் மேற்கு கலிமந்தனில் உள்ள போண்டியானக்கில் உள்ள ஜிம் ஒன்றில் 22 வயது இளம்பெண் உடற்பயிற்சி செய்து கொண்டிருக்கிறார். அப்போது, டிரெட்மில்லில் ஓடிக்கொண்டு இருந்த சமயத்தில் அப்பெண் நிலை தடுமாறி பின்னாடி உள்ள ஜன்னலை நோக்கி மெதுவாக நகர்கிறார்.

ஜன்னலை திறந்த நிலையில் இருந்ததால் கீழே விழுவதற்கு முன்பு ஜன்னலை பிடிக்க முயன்றபோதிலும், நிலை தடுமாறிய அப்பெண் ஜிம் கட்டிடத்தின் 3-வது மாடியில் இருந்து கீழே விழுந்தார். தலையில் பலத்த காயங்களுடன் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

உயிரிழந்த அப்பெண் தனது சகோதரர் மற்றும் காதலனுடன் ஜிம்மிற்குச் சென்றிருந்தார் என்றும் காதலன் இரண்டாவது மாடியில் அவருடன் உடற்பயிற்சி செய்ய சொன்னதாகவும் ஆனால், அந்த பெண் மேல் மாடியில் உள்ள டிரெட்மில்லைப் பயன்படுத்த விரும்புவதாகக் கூறி சென்ற நிலையில், பரிதாபமாக கீழே விழுந்து உயிரிழந்தார் என்று உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இதுதொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலான நிலையில், இச்சம்பவம் கடந்த 18-ந்தேதி நடந்ததாக கூறப்படுகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com