"சாதாரணப் பூனைக்குட்டி போல!" - 110 கிலோ எடையுள்ள ராட்சத முதலையை அசால்ட்டாக தூக்கிச் சென்ற பெண்!

டார்த் (முதலை) என்னுடன் நீண்ட காலமாக இருக்கிறான் - முதலையுடன் இருக்கும் நட்பு.
The Reptile Zoo
Published on: 
Summary

பொதுவாகப் பார்ப்பதற்கே பயங்கரமாகவும், அச்சுறுத்தலாகவும் இருக்கும் ராட்சத முதலை ஒன்றை, அமெரிக்கப் பெண் உயிரியல் பூங்கா ஊழியர் ஒருவர் பூனைக்குட்டியைப் போலத் தனது கைகளில் சாதாரணமாகத் தூக்கிச் செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகிப் பார்ப்போரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

வைரல் வீடியோவும் அசால்ட் ஆக்ஷனும்

அமெரிக்காவில் உள்ள புகழ்பெற்ற ஊர்வன உயிரியல் பூங்காவின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த வீடியோ பகிரப்பட்டுள்ளது.

அந்த வீடியோவில், அங்கு பணிபுரியும் பெண் ஊழியர் ஒருவர், சுமார் 250 பவுண்டு (110 கிலோவிற்கும் அதிக) எடையுள்ள 'டார்த்' என்ற பெயரிடப்பட்ட ஒரு பிரமாண்ட முதலையைத் தனது இரு கைகளாலும் மிகவும் நம்பிக்கையுடனும், ஆச்சரியப்படும்படியான உடல் வலிமையுடனும் தூக்கிக் கொண்டார்.

வழக்கமாக மனிதர்களைக் கண்டால் தாக்கும் குணம் கொண்ட முதலைகள், அந்தப் பெண்ணின் கைகளில் இருக்கும் போது எந்தவொரு சலனமும் இன்றி, மிகவும் அமைதியாகவும், சௌகரியமாகவும் படுத்துக் கொண்டு செல்கிறது.

முதலையுடன் இருக்கும் அசாத்திய நட்பு

இந்த அசாத்தியமான பிணைப்பு குறித்து அந்தப் பெண் ஊழியர் தனது இன்ஸ்டாகிராம் பதிவில் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார். அதில், 'முதலை (டார்த்) நான் சாதாரணமாகத் தூக்குவது போலத் தோன்றலாம். ஆனால், அவன் 110 கிலோவிற்கும் மேல் எடையுள்ளவன்.

நான் அவனைத் தூக்கிக் கொண்டு நடக்கும் போது அவன் எவ்வித பயமுமின்றி அமைதியாக இருக்கிறான். டார்த் என்னுடன் நீண்ட காலமாக இருக்கிறான், அதனால் எங்களுக்குள் ஒரு நம்பமுடியாத அற்புதமான உறவும், நம்பிக்கையும் உருவாகியுள்ளது.

இருப்பினும், அவன் ஒரு மாபெரும் வனவிலங்கு என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. அவனுக்கு எப்போதும் உரிய மரியாதையையும், எச்சரிக்கையையும் நாம் கொடுத்தே தீர வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

மிரண்டுபோன இணையவாசிகள்

இந்த வீடியோ வெளியான சில மணி நேரங்களிலேயே லட்சக்கணக்கான பார்வைகளைப் பெற்று வைரலாகி வருகிறது. வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் பலரும் அந்தப் பெண்ணின் தைரியத்தையும், உடல் வலிமையையும் பாராட்டி வருகின்றனர்.

"அந்த முதலை நிஜமாகவே பிரமாண்டமாக இருக்கிறது, எனக்கு இவ்வளவு தைரியம் நிச்சயம் வராது", "அவர்கள் இருவருக்கும் இடையே இருக்கும் அந்தப் பரஸ்பர நம்பிக்கை உண்மையிலேயே வியக்க வைக்கிறது" என்று தனது கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர். எவ்வளவுதான் பழகினாலும் வனவிலங்குகளிடம் எப்போதும் ஆபத்து உண்டு என்பதை உணர்த்தும் விதமாக இந்த வீடியோ அமைந்துள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com