போரினால் அதிகம் பாதிக்கப்படுவது பெண்களே- ஐநா அறிக்கை

மோதல் சூழல்களில் ஒவ்வொரு நாளும் குறைந்தது 25 பெண்கள் மற்றும் சிறுமிகள் கொல்லப்படுகின்றனர் என்று ஐக்கிய நாடுகள் சபையின் 'பெண்கள், அமைதி மற்றும் பாதுகாப்பு' குறித்த சமீபத்திய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
War is becoming more dangerous for women
Published on: 

ஐக்கிய நாடுகள் சபையின் துணை நிர்வாக இயக்குநர் நியாராட்சாயி கும்போன்ஸ்வாண்டா பெண்களுக்கும் சிறுமிகளுக்கும் போர் என்பது மேலும் ஆபத்தானதாக மாறி வருகிறது. உலகம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது என்று கவலை தெரிவித்துள்ளார்.

போரினால் அதிகம் பாதிக்கப்படுவது பெண்களே

உலகளவில் ஏற்படும் போர்களும் , மோதல்களும் பெண்களையும், சிறுமிகளையும் நெருக்கடிக்கு உள்ளாக்குவதாக ஐக்கிய நாடுகள் சபையின் 'பெண்கள், அமைதி மற்றும் பாதுகாப்பு' குறித்த சமீபத்திய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1945-க்குப் பிறகு மிக அதிக எண்ணிக்கையிலான ஆயுத மோதல்கள் நடைபெறும் ஒரு பெரும் போராட்டக் காலத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இந்தப் போர்களின் பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன.குறிப்பாக, மிகக் குறைந்த அதிகாரத்தைக் கொண்டுள்ள பெண்கள் மற்றும் சிறுமிகள் மீது பாதிப்புகள் சற்றுஅதிகமாக உள்ளதாக தெரிவித்துள்ளது.

75 கோடி பெண்கள் மோதல் நடைபெறும் பகுதிக்கு அருகில் வாழ்ந்து வருகின்றனர்

மோதல் சூழல்களில் ஒவ்வொரு நாளும் குறைந்தது 25 பெண்கள் மற்றும் சிறுமிகள் கொல்லப்படுகின்றனர் என்று ஐக்கிய நாடுகள் சபையின் 'பெண்கள், அமைதி மற்றும் பாதுகாப்பு' குறித்த சமீபத்திய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிக்கை ஒரு கசப்பான உண்மையை வெளிப்படுத்துகிறது. கடந்த ஆண்டு ஆயுத மோதல்களில் கொல்லப்பட்ட பொதுமக்களில் நான்கில் ஒருவர் பெண்களும் சிறுமிகளுமே ஆவர். மேலும், 2025-ஆம் ஆண்டில் சுமார் 75 கோடி பெண்கள் மற்றும் சிறுமிகள், ஆயுத மோதல் நடைபெறும் இடத்திலிருந்து 50 கி.மீ சுற்றளவுக்குள் வாழ்ந்து வருவதாக இந்த அறிக்கை குறிப்பிட்டுள்ளது.

போரில் கொல்லப்படும் 4 பொதுமக்களில் ஒருவர் பெண் அல்லது சிறுமி.கடந்த ஆண்டு ஆயுத மோதல்களில் கொல்லப்பட்ட 37,000-க்கும் மேற்பட்ட பொதுமக்களில் நான்கில் ஒருவர் பெண்கள் மற்றும் சிறுமிகள். 2021ஆம் ஆண்டில் இந்த விகிதம் எட்டில் ஒருவரரக இருந்தது.

இருப்பினும், பெண்களின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் அமைதிப் பேச்சுவார்த்தைகளில் பெண்களின் பங்களிப்பு இன்னும் மிகக் குறைவாகவே இருப்பதாக ஐநா அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

போர் ஒரு பெண்ணின் அனைத்து கட்ட வாழ்வியலையும் பாதிக்கிறது, ஒரு போர் நடைபெறும் போது பெண்களுக்கு ,ஆண்களுக்கு ஏற்படும் பதிப்புகள் முற்றிலும் மாறுப்பட்டவையாக இருப்பாதாக அறிக்கை தெரிவித்துள்ளது. குறிப்பாக போர் நடைப்பெறும் போது பெண்கள் தங்கள் வீட்டைவிட்டு வெளியேற கட்டாயப்படுத்தப்படுவபவராகவும்,குறிப்பாக பள்ளி அல்லது வேலைக்கு செல்லும் நிலையிலிருந்து வறுமைக்கும் பட்டினிக்கும் தள்ளுக்கிறது.இது அடிப்படையான சுகாதார தேவையையும் முற்றிலும் அழித்து விடும் ஒன்றாக மாறியிருப்பதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

போரின் போது பெண்களுகான வேலையின்மை பன்மடங்கு அதிகரித்துள்ளதாகவும்,வாழ்வாதாரம் முற்றிலுமாக சேதப்படுத்தபப்ட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. பாலின சமத்துவமின்மை, பாதுகாப்பின்மைம், வறுமை ஆகிய நிலைகளுக்கு பெண்களை போர் தள்ளியிருப்பதாகவும் ஐநாவின் அறிக்கை கூறுகிறது.

ஏற்கனவே உணவுப் பற்றாக்குறை நிலவும் மோதல் நிறைந்த பகுதிகளில் வாழும் பெண்கள், கடும் வறுமையில் வாடுவதற்கான வாய்ப்பு இருமடங்கு அதிகமாக உள்ளது – அதாவது, 17 கோடி பெண்களும் சிறுமிகளும் ஒரு நாளைக்கு 3 அமெரிக்க டாலருக்கும் குறைவான வருமானத்தில் உயிர்வாழப் போராடுகிறார்கள்.

தொழிநுட்பம் ஆயுதமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது

குறிப்பாக ஆண்களால் வடிவமைக்கப்பட்ட இந்த செயற்கை நுண்ணறிவு, புதிய தொழில்நுட்பங்கள், அதன் உத்திகள் பெண்களையும் , சிறுமிகளையும் பாதிக்கும் வகையில் உள்ளதாக உள்ளது

காசா, மியான்மர், சூடான் மற்றும் உக்ரைன் ஆகிய பகுதிகளில், வீடுகள், பள்ளிகள், மருத்துவமனைகள், சந்தைகள் மற்றும் இடம்பெயர்ந்தோர் முகாம்களைக் குறிவைத்து நீண்ட தூர ஆயுதங்களை வைத்து தாக்குதலானது நடத்தப்படுகிறது. இதனால் பெண்கள் நேரடியாகத் தாக்குதலுக்கு உள்ளாகின்றனர்.

உக்ரைனில் ஏற்படும் மின்சாரத் துண்டிப்புகள் பெண்களின் பாதுகாப்பு குறித்த கவலைகளையும் உடல்நலப் பாதிப்புகளையும் மோசமாக்குவதோடு , தங்கள் குழந்தைகளையும் மற்ற குடும்ப உறுப்பினர்களையும் கவனித்துக்கொள்வதையும் மேலும் கடினமாக்குகின்றன.

ஹைட்டியில், குற்றவாளிகள் பாலியல் வன்கொடுமைப் படங்களைப் பாதுகாத்து வைப்பதற்கும், பாதிக்கப்பட்டவர்களிடம் பணம் பறிப்பதற்கும் அல்லது அவர்களை மேலும் அவமானப்படுத்துவதற்கும் டிஜிட்டல் தொழில்நுட்பங்களையும் தளங்களையும் பயன்படுத்தி வருகின்றனர்.

போரை உத்தியாக வைத்து அதிகரித்து வரும் பாலியல் வன்முறை

உலகெங்கிலும் உள்ள போர்க்களங்களில், முடிந்தவரை அதிகபட்ச அச்சத்தையும் கட்டுப்பாட்டையும் திணிப்பதற்காக, ஆண் குற்றவாளிகளால் பாலியல் வன்முறை பெருகிய முறையிலும் திட்டமிட்ட முறையிலும் பயன்படுத்தப்பட்டு வருவதாகவும் இது எவ்வித தண்டையின்றி மேற்கொள்ளப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளது.

2022 மற்றும் 2025-க்கு இடையில், மோதல் நிறைந்த பகுதிகளில் பாலியல்ம் வன்கொடுமை உட்பட, ஐ.நா.வால் சரிபார்க்கப்பட்ட பாலியல் வன்முறைச் சம்பவங்கள் நான்கு மடங்காக அதிகரித்துள்ளது.

ஹைட்டியில் 2025-ஆம் ஆண்டில் பாலியல் சம்பந்தப்பட்ட நோய்த்தொற்று வழக்குகள் 163 சதவீதம் அதிகரித்துள்ளன.

சூடான் போரில், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறை அதன் மிக முக்கியமான அம்சங்களில் ஒன்றாக மாறியுள்ளது. மோதலின் முதல் மூன்று ஆண்டுகளில், ஆதரவு தேவைப்படும் உயிர் பிழைத்தவர்களின் எண்ணிக்கை நான்கு மடங்காக அதிகரித்துள்ளது.

உயிர் காக்கும் உதவி, பாதிக்கப்பட்டோருக்கான பாதுகாப்பு, உளவியல் சமூக ஆதரவு மற்றும் பொருளாதார உதவி ஆகியவற்றை வழங்கும் பல மகளிர் அமைப்புகள், உதவித் தொகைக் குறைப்பு மற்றும் வன்முறை அச்சுறுத்தல்கள் காரணமாக மூடப்படும் அபாயத்தில் இருப்பதாகவும் ஐநாவின் இந்த அறிக்கை தெரிவித்துள்ளது.

பெண்களுக்கான அமைதி மற்றும் பாதுகாப்பை நிலைநாட்ட இன்றியமையாத தலைவர்கள் தேவை.உலகம் முழுவதும் பெண்கள் சேவையாற்றி வருகின்றனர்: 2025-ஆம் ஆண்டில், மோதல்களைத் தடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்த 15,000-க்கும் மேற்பட்ட பெண்களுக்கு மகளிர் அமைதி மற்றும் மனிதாபிமான நிதியம் ஆதரவளித்தது. அவர்களின் முயற்சிகள், சமூக மற்றும் தனிநபர் மட்டங்களில் 992,000-க்கும் மேற்பட்ட மோதல்களைத் தவிர்க்கவும், தீர்க்கவும் அல்லது உரியவர்களிடம் ஒப்படைக்கவும் உதவின என தெரிவித்துள்ளது.

2025-ஆம் ஆண்டில், உலகெங்கிலும் உள்ள 57 அமைதிப் பேச்சுவார்த்தைகளில் பங்கேற்றவர்களில் பெண்களின் எண்ணிக்கை வெறும் ஐந்து சதவீதமாக இருந்தது. இது 2024-ஆம் ஆண்டில் இருந்த ஏழு சதவீதத்திலிருந்து குறைந்துள்ளது. (ஐக்கிய நாடுகள் சபையால் வழிநடத்தப்பட்ட அல்லது இணைந்து வழிநடத்தப்பட்ட அமைதிப் பேச்சுவார்த்தைகளில், பங்கேற்றவர்களில் பெண்களின் எண்ணிக்கை 22 சதவீதமாக இருந்தது.)

கடந்த ஆண்டு, உலகளாவிய இராணுவச் செலவினம் சாதனை அளவான 2.9 டிரில்லியன் டாலரை எட்டியது. இருந்தபோதிலும், போர்கள் தொடர்ந்து மூர்க்கமாக நடைபெறுகின்றன

இதற்கிடையில், பாதுகாப்பின் அடித்தளமாக விளங்கும் பாலின சமத்துவத்திற்கான முதலீடு குறைந்து வருகிறது. 2023-ஆம் ஆண்டிலிருந்து 2024-ஆம் ஆண்டுக்குள் இதற்கான நிதி ஒதுக்கீடு 3 பில்லியன் டாலர் குறைந்துள்ளது (24.6 பில்லியன் அமெரிக்க டாலரிலிருந்து 21.7 பில்லியன் அமெரிக்க டாலராக).

X