VIDEO | ஐரோப்பிய நாடுகளை வாட்டி வதைக்கும் வெப்பத்தால் உருகிய சாலை: பரிதவிக்கும் மக்கள்- 1300 பேர் பலி

ஐரோப்பிய நாடுகளில் வெப்பம் அதிகமான அளவில் நிலவுவதால், மக்கள் வெளியே வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
VIDEO | ஐரோப்பிய நாடுகளை வாட்டி வதைக்கும் வெப்பத்தால் உருகிய சாலை: பரிதவிக்கும் மக்கள்- 1300 பேர் பலி
Published on

காலநிலை மாற்றம் காரணமாக தற்போது ஐரோப்பிய நாடுகளில் இதுவரை இல்லாத அளவிற்கு வெப்பம் வாட்டி வதைக்கிறது. மக்கள் வெயில் தாக்கத்தை தாங்க முடியாமல் பரிதவித்து வருகிறார்கள். போலந்து, செக்குடியரசு, ஜெர்மனி போன்ற மேற்கு ஐரோப்பிய நாடுகளில் கடந்த வாரம் வெயில் கொளுத்தியது. தற்போது அங்கிருந்து கிழக்கு ஐரோப்பிய நாடுகளை நோக்கி நகர்ந்துள்ளது.

சுவிட்சர்லாந்து

ஜெர்மனியில் 41 டிகிரி வரை வெயில் கொளுத்தியது. செக்குடியரசில் 40 டிகிரி வெயில் வாட்டி வதைத்தது. குளிருக்கு பெயர் போன சுவிட்சர்லாந்தின் பாசல் நகரில் 38.8 டிகிரி வெயில் அடித்தது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். டென்மார்க்கில் 1874-க்குப் பிறகு தற்போதுதான் அதிக வெப்பம் பதிவாகியுள்ளது. அதேபோல் நெதர்லாந்திலும் வெயில் கொளுத்தியது.

இங்கிலாந்து

இங்கிலாந்தில் இந்த வருடம் ஜூன் மாதம் இதுவரை இல்லாத அதிக அளவு வெப்பத்தை பதிவு செய்துள்ளது. நேற்று ஸ்லோவாகியாவில் 41 டிகிரி வெப்பம் பதிவாகியுள்ளது. ஹங்கேரியில் 41.8 டிகிரி வெயில பதிவாகியுள்ளது.

இந்த வெப்பம் காரணமாக சாலை தார் உருக ஆரம்பித்துள்ளது. பேருந்துகள் மற்றும் சரக்கு வாகனங்கள் செல்லும்போது, டயர் உடன் உருகிய தார் ஒரு லேயர் போன்று ஒட்டிக் கொள்கிறது. இதனால் வாகனம் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஐரோப்பிய நாடுகளில் tram tracks போக்குவரத்து பிரபலம். இந்த போக்குவரத்தும் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது.

1300-க்கும் அதிகமானோர் பலி

அதோடு மட்டுமல்ல உலக சுகாதார அமைப்பு, கடந்த ஜூன் 21-ல் இருந்து 10 நாட்களில் 1300-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர் என்ற அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com