Video: மரணம் குறித்து பிரசங்கம் செய்துகொண்டிருந்தபோது சிலுவை மேலே விழுந்து பாதிரியார் பலி

மக்கள் தங்கள் பொன்னான நேரத்தை அலைபேசிகளில் செலவழித்து வீணாக்க வேண்டாம் என்று வலியுறுத்தினார்.
பாதிரியார்
Published on: 
Summary

ஈக்வடாரில் பாதிரியார் ஒருவர் தேவாலயத்தில் பேசிக்கொண்டிருந்தபோது சிலுவை மேலே விழுந்ததில் உயிரிழந்தார்.

ஈக்வடாரில் பாதிரியார் வாழ்வு மற்றும் மரணம் பற்றிப் பிரசங்கம் செய்துகொண்டிருந்தபோது அவர் மீது சிலுவை விழுந்து மரணித்தார்.

உயிரிழந்த பாதிரியார், அருட்தந்தை பேட்ரிசியோ அல்பிரடோ சான்செஸ் மோலினாரி என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

அவர் ஈக்வடாரின் குவாயாகில் நகரில் உள்ள 'அவர் லேடி ஆஃப் பெர்பெச்சுவல் ஹெல்ப்' தேவாலயத்தின் அருட்தந்தையாக இருந்தார்.

சிலுவை

கடந்த சனிக்கிழமையன்று வாழ்வு மற்றும் மரணம் பற்றி திருப்பலி உரையாற்றி கொண்டிருந்த போது அவர் அவருக்குப் பின்னால் சுவரில் தொங்கிக்கொண்டிருந்த ஒரு பெரிய சிலுவை திடீரென அவர் மீது விழுந்து அவர் உயிரிழந்தார்.

தேவாலயத்திலிருந்து திருப்பலி உரை நேரலையாக ஒளிபரப்பப்பட்டுக்கொண்டிருந்தபோதே இந்தச் சம்பவம் நிகழ்ந்தது.

சம்பவம் நடந்த உடனேயே தேவாலயத்தில் பெரும் குழப்பம் ஏற்பட்டது. அங்கிருந்த மக்கள் அலற தொடங்கினர். பலர் பாதிரியாருக்கு உதவ விரைந்தனர். ஆம்புலன்ஸும் வரவழைக்கப்பட்டது. ஆனால் பாதிரியார் ஏற்கனவே இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.

வாழ்வு - மரணம் பற்றி பேச்சு

சம்பவத்திற்கு முன் பாதிரியார் வாழ்வு மற்றும் மரணம் பற்றி பேசுகையில், இயேசு கிறிஸ்துவின் வார்த்தைகளை மேற்கோள் காட்டி, மக்கள் தங்கள் பொன்னான நேரத்தை அலைபேசிகளில் செலவழித்து வீணாக்க வேண்டாம் என்று வலியுறுத்தினார்.

அதற்குப் பதிலாக, அவர்கள் கடவுளுடனும் தங்கள் அன்புக்குரியவர்களுடனும் நேரத்தை செலவிட வேண்டும் என்று ஒரு நாள் நாம் அனைவரும் இறக்கத்தான் வேண்டும் என்றும் அவர் கூறினார்.

மேலும் கடவுளுடன் நாம் செலவிடும் நேரமே மிகவும் முக்கியமானது எனவும் அவர் தெரிவித்தார்.

இதன்பின்னர் அங்கு கூடியிருந்த மக்களை இறைவன் ஆசீர்வதிக்க வேண்டும் என்று அவர் ஜெபித்து கொண்டிருந்தபோது, ​​சிலுவை விழுந்தது அவர் மரணித்தார்.

மரணத்தைப் பற்றி ஒரு பாதிரியார் பிரசங்கம் செய்தபோது அவர் மரணித்தது அனைவரிடையேயும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com