

அமெரிக்கத் துணை அதிபர் ஜே.டி.வான்ஸ், தங்களுக்கு ஐந்தாவதாக ஒரு குழந்தை பெற்றுக்கொள்ளலாம் எனத் தனது மனைவி உஷாவிடம் விளையாட்டாகக் கூற, அதற்கு அவரது மனைவி அளித்த அதிரடியான பதில் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
சமீபத்தில் ஜே.டி.வான்ஸ் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், தங்களது குடும்பத்தில் நடந்த இந்த சுவாரசியமான சம்பவத்தைப் பகிர்ந்து கொண்டார்.
இதுகுறித்து அவர் பேசுகையில், "எனக்கு ஆறு குழந்தைகள் வரை பெற்றுக்கொள்ள ஆசை. கடந்த சில நாட்களுக்கு முன்புதான் உஷாவிடம் விளையாட்டாக, நமக்கு ஐந்தாவதாக ஒரு குழந்தையும் பெற்றுக்கொள்ளலாமா? என்று கேட்டேன்.
அதற்கு அவர், 3 மாதக் குழந்தையைக் கையில் வச்சுக்கிட்டு இருக்கும்போது இன்னும் குழந்தை வேணும்னு ஜோக் பண்ணீங்கன்னா... உங்களுக்கு 'வாசக்டமி' (ஆண்களுக்கான குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை) செய்யப்போறதா ட்விட்டர்ல அறிவிச்சிடுவேன்னு மிரட்டினார். அதனால நான் இப்போ அந்தப் பேச்சையே எடுக்குறதில்லை," எனச் சிரித்துக்கொண்டே கூறினார்.
ஜே.டி.வான்ஸ் - உஷா தம்பதிக்கு ஏற்கனவே இவான், விவேக், மிராபெல் மற்றும் அலெக் என நான்கு குழந்தைகள் உள்ளனர்.
தங்களது 3 மாதக் குட்டி குழந்தையான அலெக்கை கவனிப்பதில் உஷா மிகவும் பிஸியாக இருந்த நேரத்தில், வான்ஸ் மேலும் ஒரு குழந்தை பற்றிப் பேசியதால் தான் உஷா இந்த அதிரடி பதிலடியைக் கொடுத்துள்ளார்.
இந்தத் தம்பதியின் உரையாடல் சமூக வலைத்தளங்களில் வைரலானதைத் தொடர்ந்து நெட்டிசன்கள் பல்வேறு கருத்துக்களைப் பகிர்ந்து வருகின்றனர்.
"அரசியல் பதவிகளைத் தாண்டி, ஒரு சாதாரண குடும்பத்தில் கணவன்-மனைவிக்குள் நடக்கும் எதார்த்தமான உரையாடல் போல் இது மிகவும் க்யூட்டாக உள்ளது" எனப் பலர் பாராட்டியுள்ளனர்.
மற்றொரு தரப்பினர், "குழந்தை பெற்றுக் கொள்வதை இப்படி விளையாட்டாகப் பேசக் கூடாது" என்றும், தற்காலப் பொருளாதாரச் சூழலில் குழந்தை வளர்ப்பது எவ்வளவு கடினம் என்றும் தங்களது விமர்சனப் பார்வையைப் பதிவு செய்துள்ளனர்.
எது எப்படியோ, அரசியல் மேடைகளில் பிஸியாக இருக்கும் அமெரிக்கத் துணை அதிபரையும் அவரது மனைவி உஷா தனது நகைச்சுவையான மிரட்டலால் அடக்கி வைத்துள்ளார் என்பதே தற்போதைய சமூக வலைத்தள வைரலாகி வருகிறது.