ரஷியாவின் டிரோன் தாக்குதலுக்கு ஆதரவாக ஈரான் படைகள் - அமெரிக்கா குற்றச்சாட்டு

உக்ரைனுக்கு எதிராக ஏவ ஈரானிடம் இருந்து டிரோன்களை ரஷியா வாங்கியதாக அமெரிக்கா குற்றம்சாட்டியது.அமெரிக்காவின் இந்தக் குற்றச்சாட்டை ஈரான் மறுத்துள்ளது.
ஜான் கிர்பி
ஜான் கிர்பி
Published on

வாஷிங்டன்:

ரஷியாவிற்கு ஆதரவாக ஈரான் படைகள் கிரிமியாவில் இருப்பதற்கான ஆதாரம் அமெரிக்காவிடம் இருப்பதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக வெள்ளை மாளிகை பாதுகாப்பு கவுன்சில் அமைப்பாளர் ஜான் கிர்பி கூறுகையில், உக்ரைனுக்கு எதிராக ஈரானில் தயாரிக்கப்பட்ட டிரோன்களை ஏவுவதில் ரஷிய படைகளுக்கு உதவுவதற்காக, 2014-ல் ரஷியாவால் சட்ட விரோதமாக இணைக்கப்பட்ட உக்ரைனின் ஒரு பகுதியான கிரீமியாவிற்கு குறைந்த அளவு தனது படைகளை ஈரான் அனுப்பி உள்ளது.

எங்களிடம் உள்ள தகவல் என்னவென்றால், ஈரான் கிரீமியாவில் தனது பயிற்சியாளர்களையும் தொழில்நுட்ப உதவிகளையும் செய்து வருகின்றனர், ஆனால் ரஷிய படைகள் தான் இயக்குகின்றனர் என தெரிவித்தார்.

உக்ரைனுக்கு எதிராக ஏவுவதற்காக ஈரானிடம் இருந்து டிரோன்களை ரஷியா வாங்கியதாக அமெரிக்கா குற்றம்சாட்டியது. இந்த குற்றச்சாட்டை ஈரான் மறுத்துள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com