அமெரிக்க நாடாளுமன்ற இடைத்தேர்தல்: டிரம்ப் தலைமையிலான குடியரசு கட்சி தோல்வி

அமெரிக்காவில் இரண்டு ஆண்டுக்கு ஒருமுறை நாடாளுமன்ற இடைத்தேர்தல் நடைபெற்று வருகிறது.
US Midterm Elections
Published on: 
Summary

அமெரிக்காவில் நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற இடைக்கால தேர்தலில் ஜனநாயக கட்சி 191 இடங்களில் வெற்றி பெற்றுள்ள நிலையில், அதிபர் டொனால்ட் டிரம்பின் குடியரசு கட்சி தோல்வி அடைந்துள்ளது.

அமெரிக்காவில் இரண்டு ஆண்டுக்கு ஒருமுறை நாடாளுமன்ற இடைத்தேர்தல் நடைபெற்று வருகிறது.

இதையடுத்து அமெரிக்காவில் அதிபர் டொனாட்ல் டிரம்ப் தலைமையிலான குடியரசு கட்சியை எதிர்த்து ஜனநாயக கட்சி போட்டியிட்டது. அமெரிக்காவில் நேற்று நடைபெற்ற இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று எண்ணப்பட்டது.

மொத்த 435 இடங்களுக்கு தேர்தல் நடைபெற்ற சூழலில், ஜனநாயக கட்சி 191 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது, அதிபர் டிரம்ப் தலைமையிலான குடியரசு கட்சி 110 இடங்களை மட்டுமே பெற்று தோல்வியை சந்தித்துள்ளது.

அமெரிக்காவில் முக்கிய மாகாணங்களான டெக்சாஸ், கேன்சஸ், ஓஹியோ, தென் கரோலினா மற்றும் அயோவா ஆகிய மாகாணங்களில் ஜனநாயக கட்சி வெற்றி பெற்று செனட் சபையில் பெரும்பான்மையை பெற்றுள்ளது.

குறிப்பாக, குடியரசுக் கட்சியின் ஆதிக்கம் அதிகமாக இருந்த டெக்சாஸ், தெற்கு கரோலினா, கன்சாஸ் மற்றும் ஓஹியோ உள்ளிட்ட மாகாணங்களில் ஜனநாயகக் கட்சி முக்கிய வெற்றிகளைப் பெற்றுள்ளது.

செனட் தேர்தலில் குடியரசுக் கட்சியிடம் இருந்த ஆறு இடங்களை ஜனநாயகக் கட்சி கைப்பற்றியுள்ளது. பிரதிநிதிகள் சபையிலும் குறைந்தது எட்டு இடங்களை ஜனநாயகக் கட்சி கைப்பற்றியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த தேர்தலில் டிரம்ப் அரசின் பொருளாதார கொள்கைகள், அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு, எரிபொருள் விலை அதிகரிப்பு மற்றும் ஈரான் போர் தொடர்பான அதிருப்தி ஆகியவை வாக்காளர்களிடையே முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது.

மேலும், பல்வேறு குடியரசுக் கட்சி வேட்பாளர்களுக்காக டிரம்ப் நேரடியாக பிரசாரம் செய்திருந்த நிலையிலும், அவரது கட்சி பின்னடைவைச் சந்தித்துள்ளது.

இந்தத் தேர்தல் முடிவுகள் டிரம்ப் நிர்வாகத்தின் எஞ்சிய இரண்டு ஆண்டுகால ஆட்சியில் அரசியல் ரீதியாகப் பெரும் சவால்களை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

X