ஓய்வின்றி 14 நாட்கள் வேலை - அமெரிக்க விமான கட்டுப்பாட்டாளர்கள் பரிதவிப்பு!

விமானப் பயணிகளின் பாதுகாப்பையே கேள்விக்குறியாக்கும் வகையில் தீவிரமான மன உளைச்சலையும் உடல் சோர்வையும் ஏற்படுத்தி வருகிறது.
  American air traffic
Published on: 
Summary

அமெரிக்காவின் வான்வெளிப் பாதுகாப்பை நிர்வகிக்கும் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்கள் கடுமையான பணியிடப் பற்றாக்குறை மற்றும் மன அழுத்தத்தைச் சந்தித்து வருகின்றனர். எந்தவித ஓய்வுமின்றி தொடர்ந்து 14 நாட்கள் வரை அவர்கள் வேலை செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல்கள் உலகளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

அமெரிக்காவின் மத்திய விமானப் போக்குவரத்துத் துறையில் ஆயிரக்கணக்கான பணியாளர்கள் பற்றாக்குறை நிலவி வருவதால், ஏற்கனவே பணியில் உள்ளவர்கள் மீது பணிச்சுமை பலமடங்கு அதிகரித்துள்ளது. லீக் ஆன பணி அட்டவணைகளின்படி, விமானக் கட்டுப்பாட்டாளர்கள் ஓய்வு நாள்கூட இல்லாமல் தொடர்ச்சியாக 14 நாட்கள் ஷிப்டுகளில் பணியாற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இது விமானப் பயணிகளின் பாதுகாப்பையே கேள்விக்குறியாக்கும் வகையில் தீவிரமான மன உளைச்சலையும் உடல் சோர்வையும் ஏற்படுத்தி வருகிறது.

வான்வெளிப் பாதுகாப்பு

அண்மையில் அமெரிக்காவில் திடீரென ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக நாடு முழுவதும் உள்ள விமானப் போக்குவரத்து சேவைகள் பல மணி நேரம் முடங்கிப் போனது. பழைய டெலிகாம் கட்டமைப்புகள் மற்றும் பழுதடைந்த ரவுட்டர்கள் காரணமாக இந்த அவசர நிலை உருவானது. இத்தகைய இக்கட்டான மற்றும் சவாலான சூழல்களில் துல்லியமாகச் செயல்பட வேண்டிய கட்டுப்பாட்டாளர்கள், தொடர்ச்சியான நீண்ட நேர வேலை மற்றும் தூக்கமின்மை காரணமாகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

விமானப் போக்குவரத்துத் துறை

அமெரிக்காவில் விமானப் போக்குவரத்துத் துறையின் பழைய உள்கட்டமைப்புகளை நவீனமயமாக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதைப் போலவே, ஊழியர்களின் வேலை நேரத்தைக் முறைப்படுத்த வேண்டியதும் அவசியமாகியுள்ளது. கட்டுப்பாட்டாளர்களின் இந்த அதீத சோர்வு மற்றும் பணிச்சுமை எதிர்காலத்தில் விமானப் பாதுகாப்பிற்குப் பெரிய ஆபத்தாக மாறக்கூடும் என்பதால், உடனடியாகக் கூடுதல் பணியாளர்களை நியமிக்க வேண்டும் என்ற குரல்கள் வலுத்து வருகின்றன.

X