West Asia crisis மோதலுக்கு தீர்வுதான் என்ன?: அன்டோனியோ குட்டரெஸ்

இந்தப் போர் மனிதர்களுக்கு அளவற்ற துன்பத்தை விளைவித்து, பொருளாதார பேரழிவுக்கான விளைவுகளைத் தூண்டும்.
அன்டோனியோ குட்டரெஸ்
அன்டோனியோ குட்டரெஸ்
Published on

மேற்காசிய மோதலுக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்பட வேண்டும் என் ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக, குட்டரெஸ் தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், எனது செய்தி தெளிவானது. மனிதர்களுக்கு அளவற்ற துன்பத்தை விளைவித்து, பொருளாதார பேரழிவுக்கான விளைவுகளைத் தூண்டும் இந்தப் போரை அமெரிக்காவும் இஸ்ரேலும் நிறுத்தவேண்டும். போரை நிறுத்த இதுவே சரியான தருணம். அதேபோல், ஈரான் தனது அண்டை நாடுகளை தாக்குவதை நிறுத்தவேண்டும்.

தலைவர்கள் அழிவை விடுத்து, உரையாடலைத் தேர்ந்தெடுக்கும்போது மோதல்கள் முடிவுக்கு வரும். அதை தேர்வு செய்வதற்கான தருணம் இன்னமும் இருக்கிறது. அதை இப்போதே செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com