

கியூபா மீது அமெரிக்கா விதித்த தடைகளை எதிா்த்து ஐ.நா. பொது சபையில் கொண்டுவரப்பட்ட தீா்மானத்துக்கு ஆதரவாக இந்தியா வாக்களித்தது.
கியூபா மீது அமெரிக்கா விதித்த தடைகளை திரும்ப பெறுமாறு வலியுறுத்தி ஐநா பொதுச்சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அண்டை நாடான கியூபாவில் கம்யூனிச ஆட்சி நடப்பதை சகித்துக் கொள்ளாத அமெரிக்கா, அதன்மீது வர்த்தக, பொருளாதார, நிதி தடைகளை விதித்தது.
கடந்த 60 ஆண்டுகளாக கியூபா மீது அமெரிக்கா பொருளாதார அடக்குமுறையை மேற்கொண்டு வருகிறது.
இதனால் கியூபாவில் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டு அங்கு வறுமை மற்றும் பஞ்சம் நிலவுகிறது.
அண்மை காலமாக எரிபொருள்கள் தட்டுப்பாடு மற்றும் மின்வெட்டுகளும் பரவலாக கியூபாவில் காணப்படுகின்றன.
எனவே கியூபா மீதான தடைகளை அமெரிக்கா திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி ஐநா பொது சபையில் தீா்மானம் கொண்டு வரப்பட்டது.
193 உறுப்பினா்களை கொண்ட சபையில் 130 நாடுகள் இந்த தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தன. அதில் இந்தியாவும் ஒன்று.
17 நாடுகள் எதிராக வாக்களித்தன. 25 நாடுகள் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை. இதையடுத்து, அந்தத் தீா்மானம் நிறைவேற்றப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
தீா்மானத்தின் மீது விவாதத்தின்போது பேசிய ஐ.நா.வுக்கான இந்திய தூதரக பிரதிநிதி செளம்யா நாயா், "சர்வதேச சவால்களை பேச்சுவார்த்தை மற்றும் தூதரக முயற்சிகள் மூலம்தான் தீர்க்க வேண்டும் என்பதில் இந்தியா நம்பிக்கை கொண்டுள்ளது.
கியூபா மீதான தடைகள் நீக்கி அந்த நாட்டு மக்கள் தங்களது வளர்ச்சி கனவுகளை நனவாக்க வழிவகுக்க வேண்டும். அதே நேரம் பிற நாடுகளைப் பாதிக்கும் வகையில் தடைகளை விதிக்க வகை செய்யும் சட்டங்களை நிராகரிக்க வேண்டும்" என கேட்டுக்கொண்டார்