போர் செலவீனங்களுக்காக ஆபாசப் படங்களை சட்டப்பூர்வமாக்கும் உக்ரைன்?

காவல்துறையின் உதவியுடன் வயது வந்தோருக்கான உள்ளடக்க தொழில் தொடர்ந்து விரிவடைந்து வருகிறது.
Ukraine Attacked
Published on

ரஷியாவுக்கு எதிரான தனது போருக்கு நிதி திரட்டுவதற்காக, ஆபாச படங்களை சட்டப்பூர்வமாக்குவது குறித்து உக்ரைன் பரிசீலித்து வருவதாக 'தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல்' பத்திரிகையின் அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது .

உக்ரேனிய நாடாளுமன்ற உறுப்பினர் யாரோஸ்லாவ் ஜெலெஸ்னியாக் ஆதரிக்கும் ஒரு மசோதா, நாட்டின் ஆபாச படத் துறையை சட்டப்பூர்வ பொருளாதாரத்தின் கீழ் கொண்டு வருவதன் மூலம் 25 மில்லியன் டாலர் வரை வரி வருவாய் ஈட்ட முடியும் என்று வாதிடுகிறது.

30 ஆயிரம் டிரோன்கள்:

உக்ரைனிய நாடாளுமன்றத்தின் நிதி குழுவிற்கு தலைமை வகிக்கும் ஜெலெஸ்னியாக், அந்த பணம் போர்பணிகளுக்காக 30,000 ஆளில்லா விமானங்களை வாங்குவதற்கு போதுமானதாக இருக்கும் என்று மதிப்பிடுகிறார்.

ஆபாச படங்களை தயாரிப்பது, வைத்திருப்பது அல்லது விநியோகிப்பது தற்போது சட்டவிரோதமாகும், மேலும் இதற்கு ஏழு ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படலாம். இருந்தபோதிலும், ஊழல் நிறைந்த காவல்துறையின் உதவியுடன் ஆபாசப்பட தொழில் தொடர்ந்து விரிவடைந்து வருகிறது.

வரி வசூவிக்க திட்டம்?

உக்ரைனிய அதிகாரிகள் சமீபத்தில் ஆபாசம் சார்ந்த உள்ளடக்கத்தை உருவாக்குபவர்களிடம் இருந்து வரிகளை வசூலிக்க தொடங்கியுள்ளனர். ஆனால், தங்கள் வருமானத்தை அறிவிக்கும் கிரியேட்டர்கள், உக்ரைனின் ஆபாச சட்டங்களின் கீழ் குற்றமாக இருக்கும் செயல்களை வெளிச்சத்திற்கு கொண்டுவர முடியும்.

"இந்தப் பெண்கள் ஒன்று வரி செலுத்தாமல் அதற்காக குற்றவியல் வழக்குகளை எதிர்கொள்கிறார்கள், அல்லது வரி செலுத்தி ஆபாச சட்டங்களை மீறியதாக குற்றம் சாட்டப்படுகிறார்கள்," என்று உக்ரைன் நாடாளுமன்றத்தின் நிதிக் குழுவின் தலைவரான ஜெலெஸ்னியாக், ஜர்னலிடம் கூறினார்.

ரஷியா தனது முழு அளவிலான படையெடுப்பை தொடங்குவதற்கு முன்பு, வயது வந்தோருக்கான பொழுதுபோக்கு தொழில் விஷயத்தில் உக்ரேனிய அதிகாரிகள் பெரும்பாலும் கண்டுகொள்ளாமல் இருந்தனர்.

அதிக வருவாய்:

மூன்று பிராந்தியங்களில் உள்ள அதிகாரிகள் 20,000 டாலர் வரை லஞ்சம் பெற்றதாக கூறப்படும் வழக்குகளை உக்ரேனிய தலைமை வழக்கறிஞர் அலுவலகம் சமீபத்தில் வெளிப்படுத்தியதாக அந்த பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

ஜர்னல் மேற்கோள் காட்டிய புள்ளிவிவரங்களின்படி, அந்த தளத்தின் தாய் நிறுவனமான ஃபீனிக்ஸ் இன்டர்நேஷனலின் தரவுகளின் அடிப்படையில், 2023-ஆம் ஆண்டில் 7,900 உக்ரேனியர்கள் ஒன்லிஃபேன்ஸ் மூலம் 131 மில்லியன் டாலருக்கும் அதிகமாக சம்பாதித்துள்ளனர்.

ஆனால், கிரியேட்டர்களிடம் இருந்து வருவாய் வசூலிப்பதற்கான வரி அதிகாரிகளின் முயற்சிகள் ஒரு புதிய சிக்கலை உருவாக்கியுள்ளன.

X

Maalai Malar
www.maalaimalar.com