வெள்ளை மாளிகையில் விளாடிமிர் புதினின் தூதரை சந்தித்த டிரம்ப்

ஒப்பந்தம் ஒட்டுமொத்த ஐரோப்பாவையும் உள்ளடக்கியதாக இருக்கலாம் என்று டிரம்ப் குறிப்பிட்டார்.
Donald Trump
Published on: 

அதிபர் டொனால்டு டிரம்ப், வெள்ளை மாளிகையில் விளாடிமிர் புதின் தூதரை சந்தித்ததாகவும், அதே நேரத்தில் அங்கு வருகை தந்திருந்த உக்ரேனிய அதிகாரிகளை சந்திக்கவில்லை என்றும் தெரிவித்தார்.

ஓவல் அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், தான் கிரில் டிமிட்ரியேவை (அதிபர் புதினின் தூதர்) சந்தித்ததை உறுதிப்படுத்தினார். "நாங்கள் எதை பற்றி விவாதித்தோம் என்று என்னால் சொல்ல முடியாது" என்று டிரம்ப் கூறினார். உக்ரேனிய பிரதிநிதிகளை சந்தித்தீர்களா என்று கேட்டதற்கு, தான் அவர்களை சந்திக்கவில்லை என்று டிரம்ப் பதிலளித்தார்.

மிகப்பெரிய ஒப்பந்தம்:

ஒலேஷ்கி (Oleshky) பகுதியில் போர் நிறுத்தத்தை ஏற்படுத்த மெலானியா டிரம்ப் மேற்கொண்ட முயற்சியை கௌரவிக்கும் நிகழ்விற்காக, ரஷ்யா மற்றும் உக்ரைன் ஆகிய இரு நாடுகளின் பிரதிநிதிகளும் வெள்ளை மாளிகைக்கு வந்திருந்தனர்.

டிமிட்ரியேவுடனான சந்திப்பு குறித்து கூடுதல் விவரங்களை தெரிவிக்க மறுத்த டிரம்ப், ஏதோ ஒரு ஒப்பந்தம் தயாராகி வருவதற்கான குறிப்பை அளித்தார்.

"இது ஒரு ஒப்பந்தமாக இருக்கப்போகிறது; இது ஒரு மிகப்பெரிய ஒப்பந்தமாக இருக்கும். இதில் உக்ரேனை தாண்டி பிற நாடுகளும் உள்ளடங்கும்" என்று கூறிய டிரம்ப், இது ஒட்டுமொத்த ஐரோப்பாவையும் உள்ளடக்கியதாக இருக்கலாம் என்றும் குறிப்பிட்டார்.

மனிதாபிமான பங்களிப்பு:

உக்ரேனின் முற்றுகையிடப்பட்ட கிராமம் ஒன்றில், ரஷ்ய மற்றும் உக்ரைனிய அதிகாரிகளை ஒன்றிணைத்து போர் நிறுத்தத்தை ஏற்படுத்த மெலானியா டிரம்ப் மேற்கொண்ட முயற்சியை குறிக்கும் வகையில், நேற்று (வியாழக்கிழமை) வெள்ளை மாளிகையில் ரஷ்ய அதிபர் விளாதிமிர் புடினின் தூதர் மெலானியா டிரம்ப்புடன் இணைந்து தோன்றினார்.

மெலானியாவின் அழைப்பின் பேரில் பேசிய கிரில் டிமிட்ரியேவ், ஆறு நாள் போர் நிறுத்தத்தை உறுதி செய்வதில் அவர் ஆற்றிய "சிறப்பான மனிதாபிமான பங்களிப்பிற்காக" அவருக்கு நன்றி தெரிவித்தார்.

X