கனடா நிறுவனங்கள் அமெரிக்காவுக்கு இடம் பெயர்ந்தால் சுங்க வரிகள் கிடையாது: டிரம்ப் புதிய அறிவிப்பு

அமெரிக்கா- கனடா இடையிலன வர்த்தக பேச்சுவார்த்தைகள் தோல்வியை சந்தித்து, டிரம்ப் 50 சதவீதம் வரி விதித்துள்ளார்.
trump
trumpடொனால்டு டிரம்ப்
Published on

அமெரிக்கா- கனடா வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் முறிந்ததைத் தொடர்ந்து சுமார் 20 பில்லியன் டாலர் மதிப்புள்ள கனடியப் பொருட்கள் மீது அமெரிக்கா 50 சதவீதம் வரி விதித்தது. இந்த வரிகள் 2027-ம் ஆண்டு முதல் அமலுக்கு வரும் என கூறப்படுகிறது.

பேச்சுவார்த்தைகளில் உடன்பாடு எட்டப்படாததால் 2 நாடுகளும் ஒன்றையொன்று குற்றம்சாட்டின. அமெரிக்காவுடன் மோதலுக்குத் தங்கள் நாடு தயாராக இருப்பதாக கனடா அதிகாரிகள் எச்சரித்திருந்தனர். புதிதாக விதிக்கப்பட்டு உள்ள வரிகளைத் தவிர்ப்பதற்காக, கனடிய நிறுவனங்கள் தங்கள் தலைமையகங்களையும் உற்பத்தி வசதிகளையும் அமெரிக்காவுக்கு இடமாற்றம் செய்ய வேண்டும் என்று அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.

கனடா மிக மோசமான வர்த்தகப் பங்காளிகளில் ஒன்று

இது தொடர்பாக அவர் சமூக வலைதள பதிவில் அமெரிக்காவுடன் வர்த்தகம் செய்யும் அனைத்து கனடிய நிறுவனங்களும் உடனடியாக அமெரிக்காவிற்கு இடம் பெயரட்டும். அவற்றுள் பல, அமெரிக்காவின் முட்டாள்தனமான தலைமை காரணமாக பல ஆண்டுகளுக்கு முன்பே வெளியேறிய நிறுவனங்களாகும்.

நீங்கள் திரும்பி வரும்போது, ​​சுங்க வரிகள் எதுவும் இருக்காது என்று குறிப்பிட்டுள்ளார். மற்றொரு பதிவில், கனடா அமெரிக்காவின் 2-வது பெரிய வர்த்தகப் பங்காளியாக இருந்தபோதிலும், அது அமெரிக்காவின் மிக மோசமான வர்த்தகப் பங்காளிகளில் ஒன்றாகும் என்று அவர் குறிப்பிட்டு உள்ளார்.

அமெரிக்கப் பொருளாதாரம் கனடாவை விடப் பல மடங்கு பெரியது. கனடாவின் ஏற்றுமதியில் சுமார் 70 சதவீதம் அமெ ரிக்காவிற்கே செல்கிறது. அதே நேரத்தில் பல அமெ ரிக்க மாநிலங்களுக்கு மிக முக்கிய வாடிக்கையாள ராகக் கனடா விளங்குறது என்பது குறிப்பிடத்தக்கது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com