வடகொரியா அதிபருக்கு உடல் பருமன் பிரச்சனை

2021-ம் ஆண்டில் தனது உணவை மாற்றியமைத்த கிம் ஜாங் உன், உடல் எடையைக் குறைத்தார்.தென் கொரிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
வடகொரியா அதிபருக்கு உடல் பருமன் பிரச்சனை
Published on

வடகொரிய நாட்டு அதிபர் கிம் ஜாங் உன் உடல்பருமன் பிரச்சனையால் அவதிப்பட்டு வருவதாக தென் கொரியா தெரிவித்துள்ளது. அவர் உடல் எடை, உயர் ரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு உள்ளிட்ட உடல் பருமன் தொடர்பான பிரச்சனைகளால் அவதிப்பட்டு வருகிறார் என்றும், அவரது அதிகாரிகள் வெளிநாட்டில் புதிய மருந்துகளை கொண்டு வர முயற்சிக்கிறார்கள் என்றும் தென் கொரியாவின் உளவு நிறுவனம் தெரிவித்தது.

2021-ம் ஆண்டில் தனது உணவை மாற்றியமைத்த கிம் ஜாங் உன், உடல் எடையைக் குறைத்தார். ஆனால் தற்போது அவரது உடல் எடை மீண்டும் அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதற்கிடையே கிம் ஜாங் உன் அதிபர் பொறுப்பிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக விலக உள்ளதாகவும், தனது 12 வயது மகளை நாட்டின் அடுத்த அதிபராக்க திட்டமிட்டு இப்போதே பயிற்சி அளித்து வருகிறார்.

பொது இடங்களுக்கு தன் மகளையும் உடன் அழைத்துச் செல்கிறார் என்றும் தென் கொரிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

X

Maalai Malar
www.maalaimalar.com