This is business.. அமெரிக்க ஆயுதங்களை வாங்க விரும்புகிறீர்களா? என சீன அதிபரிடம் கேட்ட டிரம்ப்

தைவானை கைப்பற்ற சீனா முயன்று வருகிறது.
 சீன அதிபரிடம் கேட்ட டிரம்ப்
சீன அதிபரிடம் கேட்ட டிரம்ப்
Published on: 
Summary

அமெரிக்க ஆயுதங்களை வாங்க விருபுகிறீர்களா? என டிரம்ப் சீன அதிபரிடம் கேட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

தைவானை கைப்பற்ற சீனா முயன்று வருகிறது. சீனாவிடம் இருந்து தற்காத்துக்கொள்ள அமெரிக்காவிடம் தைவான் ஆயுதங்கள் வாங்க மும்முரம் காட்டி வருகிறது.

தைவானுக்கு சுமார் 14 பில்லியன் டாலர் மதிப்பிலான புதிய ஆயுததங்கள் அமெரிக்க அதிபர் டிரம்பின் ஒப்புதலுக்காகக் காத்திருக்கின்றன.

இந்த சூழலில் ஐநா கூட்டத்தில் பங்கேற்க அமெரிக்க சென்றிருந்த சீன அதிபர் ஜி ஜின்பிங்கிடம், அமெரிக்கா ஆயுதங்களை வாங்க விரும்புகிறீர்களா? என டிரம்ப் கேட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

சீனாவும் - அமெரிக்காவும் உலகின் இரு பெரும் வல்லரசாக உள்ள நிலையில் சீன அதிபரின் அமெரிக்க பயணம் முக்கியத்துவம் பெற்றது.

சீனாவுக்கான அமெரிக்கத் தூதர் டேவிட் பெர்டூவின் கூற்றுப்படி, அமெரிக்கா உலகம் முழுவதும் ஆயுதங்களை விற்பனை செய்வதாக டிரம்ப், ஷி ஜின்பிங்கிடம் கூறியதுடன், சீனாவும் சில அமெரிக்க ஆயுதங்களை வாங்க விரும்புகிறதா என்றும் கேட்டார் என பாக்ஸ் நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

தைவான்

ஜி ஜின்பிங்கைக் கோபப்படுத்துவதைத் தவிர்ப்பதற்காக அமெரிக்கா தைவானுக்கு ஆயுத விற்பனையை நிறுத்தி வைத்திருக்கிறதா என்று பெர்டூவிடம் கேட்கப்பட்டபோது, ​​அவர் அதை அடியோடு மறுத்தார்.

தைவான் விவகாரத்தில் டிரம்ப் மிகவும் கடுமையான நிலைப்பாட்டை எடுத்துள்ளதாகவும், இதற்கு முன்னர் அத்தீவிற்கு பெருமளவிலான ஆயுத விற்பனைக்கு ஒப்புதல் அளித்துள்ளதாகவும் பெர்டியூ கூறினார்.

வெள்ளை மாளிகையில் ஜி ஜின்பிங்குடனான பேச்சுவார்த்தைக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், ஷி ஜின்பிங்குடனான தனது சந்திப்பில் தைவான் பற்றி அதிகம் விவாதிக்கப்படவில்லை என்றும், தற்போதைக்கு எல்லாம் நன்றாகப் போய்க்கொண்டிருக்கிறது என்றும் கூறினார்.

இந்தப் பிரச்சினை குறித்த தனது கருத்துக்களை சீன அதிபர் புரிந்துகொள்கிறார் என்றும் அவர் மேலும் கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com