

அமெரிக்காவில் பாராளுமன்றத்துக்கான இடைக்கால தேர்தலில் அதிபர் டிரம்பின் குடியரசு கட்சி படுதோல்வி அடைந்தது.
எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சி அபார வெற்றி பெற்று செனட் சபை, பிரதிநிதிகள் சபை ஆகிய இரு அவைகளையும் கைப்பற்றி உள்ளது. பாராளுமன்றத்தில் ஆளும் குடியுரசு கட்சி பெரும்பான்மை இழந்துள்ளதால் டிரம்புக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டு உள்ளது.
இதற்கிடையே இடைக்கால தேர்தல் தோல்விக்கு ஈரான் மீதான போர் காரணம் என்று டிரம்ப் ஒப்புக்கொண்டார்.
இந்த தேர்தல் தோல்வி காரணமாக டிரம்ப் நிர்வாகம் கடும் விமர்ச னத்துக்கு உள்ளாகி இருக்கிறது. இதில் பாதுகாப்புத்துறை மந்திரி பீட் ஹெக்செத், வெளியுறவுத்துறை மந்திரி மார்கோ ரூபியோ ஆகியோர் மீது ஆளும் குடியரசு கட்சிக்குள் கடும் அதிருப்தி நிலவுவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
குறிப்பாக, ஈரான் போரை கையாண்ட விதம் தொடர் பாக பீட் ஹெக்செத் கடும் அழுத்தத்திற்கு உள்ளாகி இருக்கிறார். கட்சியின் தேர்தல் தோல்விகளுக்கு பீட் ஹெக்செத்தே காரணம் என்று சில குடியரசுக் கட்சியினரும், நிர்வாகத்தில் இருப்பவர்களும் கருதுகிறார்கள்.
மேலும், குடியரசு கட்சியை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் தாமஸ் மேசி, பீட் ஹெக்செத்தை பதவியில் இருந்து நீக்குவதற்கான தீர்மானத்தை மீண்டும் கொண்டு வர போவதாக தெரிவித்து உள்ளார்.
இது குறித்த வாக்கெடுப்பு அடுத்த வாரமே நடை பெறக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வருகிற ஜனவரி மாதம் ஜனநாயகக் கட்சியினர் பாராளுமன்றத்தின் கட்டுப்பாட்டைப் பெறுவதற்கு முன்பு பாதுகாப்பு மந்திரியை மாற்றுமாறு டிரம்பை தாமஸ் மேசி வலியுறுத்தியுள்ளார்.
பீட் ஹெக்செத்துக்கு எதிராக தாமஸ் மேசிமுன்னரே பதவி நீக்கத் தீர்மானத்தை அறிமுகப்படுத்தியிருந்தார். இடைக்காலத் தேர்தல்க ளுக்கு முன்னதாக அந்தத் தீர்மானம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
பீட் ஹெக்செத்துக்கு அதிபர் டிரம்ப் ஆதரவு தெரிவித்துள்ள போதிலும் அவர் மீது அதிருப்தி குடியரசு கட்சிக்குள் அதிகரித்தப்படி உள்ளது. இதற்கிடையே தேர்தல் தோல்வியை தொடர்ந்து டிரம்ப் நிர்வாகத்தில் இருந்து வெளியேற பீட் ஹெக்செத், மார்கோ ரூபியோ முடிவு செய்து உள்ளதாக தகவல் வெளியாகின.
ஆனால், அதை மார்கோ ரூபியோ மறுத்து உள்ளார். அவர் கூறும்போது, டிரம்பின் பதவிக் காலம் முடியும் வரை அவருடன் இணைந்து பணியாற்றுவதே தனது திட்டம் என்றார்.
இந்தநிலையில் அமெரிக்க அமைச்சரவையில் மாற்றம் வரும் என்ற தகவலை வெள்ளை மாளிகை மறுத்து உள்ளது. அமைச்சரவையில் உடனடி மாற்றம் ஏதும் இருக்காது என்று வெள்ளை மாளிகை தெரிவித்து உள்ளது.