தாய்லாந்து புதிய பிரதமராக தக்சினின் மகள் பேடோங்டர்ன் ஷினவத்ரா தேர்வு

புதிய பிரதமராக பேடோங்டர்ன் ஷினவத்ரா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.தாய்லாந்தின் 2-வது பெண் பிரதமர் என்ற பெருமையை இவர் பெற்றார்.
தாய்லாந்து புதிய பிரதமராக தக்சினின் மகள் பேடோங்டர்ன் ஷினவத்ரா தேர்வு
Published on

பாங்காக்:

தாய்லாந்தில் லஞ்ச வழக்கில் தண்டனை பெற்ற பிச்சித் சைபானை மந்திரியாக நியமித்தது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார். பிச்சித் சைபானை மந்திரியாக நியமிக்க பரிந்துரை செய்த பிரதமர் ஸ்ரெத்தா தவிசினை பதவிநீக்கம் செய்து அந்நாட்டின் அரசியலமைப்பு கோர்ட் உத்தரவிட்டது.

ஸ்ரெத்தா தவிசின் பதவிநீக்கம் செய்யப்பட்டாலும், புதிய பிரதமரை பாராளுமன்றம் அங்கீகரிக்கும் வரை அவர் காபந்து பிரதமராக நீடிப்பார் என தெரிவிக்கப்பட்டது.

இதற்கிடையே, புதிய பிரதமர் வேட்பாளரை தேர்வு செய்யும் பணியில் ஆளும்கட்சியான பியூ தாய் கட்சி தீவிர ஆலோசனை மேற்கொண்டது. முன்னாள் நீதித்துறை மந்திரி சாய்காசெம் நிதிசிரி மற்றும் முன்னாள் பிரதமர் தக்சின் ஷினவத்ராவின் இளைய மகள் பேடோங்டர்ன் ஷினவத்ரா (37) ஆகியோரின் பெயர்கள் முன்னிலையில் இருந்தன. இவர்களில் பேடோங்டர்ன் ஷினவத்ராவை கட்சி தலைமை தேர்வு செய்து அறிவித்தது. அவருக்கு பிரதமர் பதவி வழங்க கூட்டணிக் கட்சிகளும் ஒப்புதல் அளித்தன.

இந்நிலையில், புதிய பிரதமரை தேர்ந்தெடுப்பதற்காக பாராளுமன்றத்தில இன்று வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் பெரும்பான்மை வாக்குகளைப் பெற்று தாய்லாந்தின் புதிய பிரதமராக தக்சினின் இளைய மகள் பேடோங்டர்ன் ஷினவத்ரா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் தாய்லாந்தின் இரண்டாவது பெண் பிரதமர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com