ஜன்னல் வழியாக விமானத்திற்குள் ஏறிக்குதித்த 'பைலட்'

பயணி ஒருவர் எதிர்பாராதவிதமாக விமானத்தின் கதவை அடைத்த போது அது உள்பக்கமாக லாக் ஆகிவிட்டது.புகைப்படங்கள் வேகமாக பரவி வரும் நிலையில், பைலட்டுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
ஜன்னல் வழியாக விமானத்திற்குள்  ஏறிக்குதித்த 'பைலட்'
Published on

அமெரிக்காவில் சாண்டியாகோ சர்வதேச விமான நிலையத்தில் இருந்து சாக்ரமெண்டோவுக்கு செல்ல தயாராக நின்ற ஒரு விமானத்தில் ஜன்னல் வழியாக 'பைலட்' ஏறிக்குதித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இந்த படத்தை எடுத்த மேக்ஸ் ரெக்ஸ்ரோட் என்ற பயணி, இது ஜோக் இல்லை, பயணி ஒருவர் எதிர்பாராதவிதமாக விமானத்தின் கதவை அடைத்த போது அது உள்பக்கமாக லாக் ஆகிவிட்டது. எனவே வேறு வழியின்றி 'பைலட்' ஜன்னல் வழியாக விமானி அறைக்குள் ஏறிக் குதித்தார் என பதிவிட்டுள்ளார்.

இந்த புகைப்படங்கள் வேகமாக பரவி வரும் நிலையில், பைலட்டுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com