மிஸ் யுனிவர்ஸ் அழகி பட்டத்தை இந்தியாவுக்கு பெற்றது பெருமை தருகிறது- ஹர்னாஸ் கண்ணீர் மல்க பேட்டி

மிஸ் யுனிவர்ஸ் பட்டத்தை 21 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவுக்கு மீண்டும் பெற்று தந்திருப்பதை நான் மிக பெருமையாக கருதுகிறேன்.
ஹர்னாஸ் கவுர்
ஹர்னாஸ் கவுர்
Published on

உலக பிரபஞ்ச அழகி பட்டம் வென்றதும் ஹர்னாஸ் கவுருக்கு வாழ்த்துக்கள் குவிந்துள்ளன. அவருடன் போட்டியில் பங்கேற்ற வெளிநாட்டு அழகிகள் அவருக்கு கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்தனர்.

இந்தியாவில் இருந்தும் நிறைய பேர் ஹர்னாஸ் கவுரை வாழ்த்தினார்கள். சமூக வலைதளங்களில் அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்தது.

நான் இந்த பட்டம் வென்றதற்கு கடவுளுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். எனது பெற்றோர்களும், மிஸ் இந்தியா அமைப்பு நிர்வாகிகளும் எனக்கு வழி காட்டினார்கள்.

சர்வதேச போட்டியில் பங்கேற்க அனைத்து துறைகளிலும் என்னுடன் இருந்தவர்கள் எனக்கு ஒத்துழைப்பு தந்தனர். எனக்காக லட்சக் கணக்கானவர்கள் பிரார்த்தனை செய்தனர். நான் பட்டம் வெல்ல வேண்டும் என்று அன்பை வெளிப்படுத்தினார்கள். அவர்கள் ஒவ்வொருவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

மதிப்புமிக்க இந்த மிஸ் யுனிவர்ஸ் பட்டத்தை 21 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவுக்கு மீண்டும் பெற்று தந்திருப்பதை நான் மிக பெருமையாக கருதுகிறேன்.

இவ்வாறு அவர் கண்ணீர் மல்க தெரிவித்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com