

என்விடியா தலைமைச் செயல் அதிகாரி பதவியை ராஜினாமா செய்த ஜென்சன் ஹுவாங், மீண்டும் நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்க முயற்சிப்பதாக தெரியவந்துள்ளது.
சிப் தயாரிப்பு நிறுவனமான என்விடியா நிறுவனத்தில் தனக்குக் கீழ் பணியாற்றிய மூத்த நிர்வாகியான கிம்பர்லி பவல் மற்றும் சிங்கப்பூரைச் சேர்ந்த மெகாஸ் பீட் நிறுவனத்தின் நிர்வாகியான ஆலிஸ் ஹுவாங் ஆகியோருடன் தகாத உறவில் இருந்ததாக குற்றச்சாட்டு எழுந்ததை தொடர்ந்து, ஜென்சன் தனது சிஇஓ பதவியை ராஜினாமா செய்திருந்தார்.
இதில் ஆலிஸ் ஹுவாங் சீன உளவாளியாக இருக்கலாம் என அமெரிக்க புலனாய்வு நிறுவனங்கள் சந்தேகம் எழுப்பியதும் அவருக்கு சிக்கலாக அமைந்தது.
இதனால் என்விடியா நிறுவனத்தின் பங்கு மதிப்பும் கடுமையுமாக சரிந்தன. ஜென்சனை பதவிநீக்கம் செய்ய என்விடியா நிர்வாகம் தீவிரம் காட்டிய நிலையில் அழுத்தத்தின் பேரில் அவரே ராஜினாமா செய்தார்.
இருப்பினும், அவர் ராஜினாமா செய்த சில நாட்களிலேயே, ஆதரவாளர்கள் ஜென்சன் ஹுவாங் மீண்டும் திரும்ப வேண்டும் என்று கோரி ஒரு பிரச்சாரத்தைத் தொடங்கினர்.
சிலிக்கான் பள்ளத்தாக்கின் பல முக்கிய பிரமுகர்களும் முதலீட்டாளர்களும் அவர் மீண்டும் திரும்புவதற்காக என்விடியா நிர்வாகக் குழுவிற்கு அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.
குறிப்பாக டெஸ்லா சிஇஓ எலான் மஸ்க் மற்றும் எபிக் கேம்ஸ் சிஇஓ டிம் ஸ்வீனி ஆகியோர் ஜென்சனுக்கு பகிரங்கமாக ஆதரவு தெரிவித்துள்ளனர்.
ஹுவாங்கின் ஆதரவாளர்கள், என்விடியா இயக்குநர் குழு உறுப்பினர்களை சம்மதிக்க வைக்கவும், வெள்ளை மாளிகையின் ஆதரவைப் பெறவும் வார் ரூம் அமைக்க அமைக்க முயற்சிப்பதாகவும் கூறப்படுகிறது.
ஜென்சன் ஹுவாங்கும் இந்த முயற்சிகளுக்கு ஒப்புதல் அளித்துள்ளதாக சொல்லப்படுகிறது.
முன்னதாக ஜென்சனுடன் தொலைபேசியில் பேசிய அமெரிக்க அதிபர் டிரம்ப், பதவியை விட்டுக்கொடுக்காமல் எதிர்த்து போராடுமாறு அறிவுரை அளித்திருந்தார்.
மறுபுறம், அல்டிமீட்டர் கேப்பிட்டல் மற்றும் அட்ரைட்ஸ் மேனேஜ்மென்ட் போன்ற முதலீட்டாளர்களும், ஹுவாங்கை மீண்டும் பதவியில் அமர்த்தும் சாத்தியக்கூறுகளைப் பரிசீலிக்குமாறு இயக்குநர் குழுவிற்கு ஒரு பகிரங்கக் கடிதம் எழுதியுள்ளனர்.
மறுபுறம், ஜென்சனின் ராஜினாமாவுக்கு வழிவகுத்த நடத்தை குறித்து என்விடியா இயக்குநர் குழு ஒரு சுயாதீன விசாரணையை நடத்தி வருகிறது.
கோலெட் கிரெஸ் தற்போது என்விடியா நிறுவனத்தின் இடைக்கால சிஇஓவாக பணியாற்றி வருகிறார்.