

அமெரிக்காவில் எலான் மஸ்க்கிற்கு சொந்தமான ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம், தனது ஸ்டார்லிங்க் நெட்வொர்க்கிற்கான 26 செயற்கைக்கோள்களை நேற்று வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது.
அமெரிக்காவில் ஸ்பேஸ்எக்ஸ்-கிற்கு சொந்தமான ஸ்டார்ஷிப் உலகின் மிகப்பெரிய சக்திவாய்ந்த ராக்கெட் அமைப்பாக உள்ளது.
124 மீட்டர் உயரமுள்ள இது, ஒரு பூஸ்டர் ராக்கெட்டின் மீது பொருத்தப்பட்ட விண்கலத்தை கொண்டுள்ளது.
இதன் இரண்டு நிலைகளும் தொடக்கத்திலிருந்தே முழுமையாக மீண்டும் பயன்படுத்தக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து எலான் மஸ்க் கடந்த வாரம் கூறுகையில், ஸ்பேஸெக்ஸ் நிறுவனம் தனது அடித்த சோதனை பயணத்தின்போது, ஏவுதள கோபுரத்தில் உள்ள இயந்திர கரங்களை பயன்படுத்தி தனது பிரமாண்டமான ஸ்டார்ஷிப் ராக்கெட்டின் இரு பகுதிகளையும் பிடிக்கும் தெரிவித்திருந்தார்.
மேலும் இந்த மீட்பு பணியின்போது கீழ்பகுதியான சூப்பர் ஹெவி பூஸ்டர் மற்றும் மேல்பகுதியான ஸ்டார்ஷிப் ராக்கெட் ஆகிய இரண்டையும் மீட்க நிறுவனம் திட்டமிட்டுள்ளதாகவும் எலான் மஸ்க் தெரிவித்திருந்தார்.
ஸ்டார்ஷிப்பை முழுமையாக மறுபயன்பாட்டிற்கு மாற்றுவதே இந்த இரண்டு பாகங்களையும் பிடிப்பதன் நோக்கமாக பார்க்கப்படுகிறது.
இதன்மூலம் இது காலப்போக்கில் ஏவுதல் செலவுகளை குறைத்து, ராக்கெட்டுகள் அடிக்கடி பறக்க வழிவகை செய்கிறது.
அதன்படி நேற்று அமெரிக்காவின் டெக்சாஸில் உள்ள ஸ்டார்பேஸில் இருக்கும் ஆர்பிட்டல் ஏவுதளம் இரண்டில் இருந்து, 26 ஸ்ஹ்டார்லிங்க் v3 செயற்கைக்கோள்கள் அதிகாலை 4:17 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட்டது.
இதையடுத்து திட்டமிட்டபடி ராக்கெட்டின் இரு பகுதிகளும் பிரிந்து, வெற்றிகரமாக தொடங்கியது. இதைத்தொடர்ந்து ஏவப்பட்ட ஆறரை நிமிடங்களுக்கு பிறகு, ஹெவி பூஸ்டர் மெக்சிகோ வளைகுடா கடலுக்கு மேல்பரப்பில் வெடித்து சிதறியது.
ஆனால் மேல்பகுதியான ஸ்டார்ஷிப் ராக்கெட் தற்போது சுற்றுப்பாதையில் உள்ளதால், அது இன்று மீண்டும் பூமிக்கு திரும்பும்போது, அதை மீட்க ஸ்பேஸெக்ஸ் திட்டமிட்டுள்ளது.
மேலும் அது ஏவுதளத்தில் மீண்டும் தரையிறங்கும்போது, அது இயந்திர கைகளால் பிடிக்கப்படவுள்ளது. பூமிக்கு திரும்பிய பிறகு விண்கலம் பிடிக்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.
இந்த ஸ்டார்ஷிப் மேல்நிலை ராக்கெட்டை பிடித்த பிறகு, அதனை மீண்டும் பயன்படுத்த ஸ்பேஸ்எக்ஸ் திட்டமிட்டுள்ளது.
இந்த திட்டத்தின் ஒரு பகுதி தோல்வி அடைந்திருந்தாலும், ஸ்டார்லிங்க் நெட்வொர்க்கிற்கான 26 செயற்கைக் கோள்களை ஸ்பேஸ்எக்ஸ் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது.
இந்த நிலையில் ஹெவி பூஸ்டர் வெடித்து சிதறியது குறித்து ஸ்பேஸெக்ஸ் நிறுவன ஊழியர் டான் ஹூவோட் கூறுகையில், தற்போது எங்களால் அதை ஏன் திரும்ப கொண்டுவர முடியவில்லை என்பது உறுதியாக தெரியவில்லை என தெரிவித்துள்ளார்.