'ஸ்பேஸ்எக்ஸ்' ராக்கெட் மூலம் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு 4 வீரர்கள் பயணம்

எரிபொருள் கசிவு காரணமாக 3 வாரங்கள் தாமதத்திற்குப் பின் இந்த விண்கலம் ஏவப்பட்டது.
Astronauts
Published on: 
Summary

'ஸ்பேஸ்எக்ஸ்' ராக்கெட் மூலம் 4 விண்வெளி வீரர்கள் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு வெற்றிகரமாக அனுப்பி வைக்கப்பட்டனர்.

அமெரிக்காவின் கேப் கனாவரல் ஏவுதளத்தில் இருந்து, நேற்று எலான் மஸ்க்கின் 'ஸ்பேஸ்எக்ஸ்' ராக்கெட் மூலம் 4 விண்வெளி வீரர்கள் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு வெற்றிகரமாக அனுப்பி வைக்கப்பட்டனர்.

எரிபொருள் கசிவு காரணமாக 3 வாரங்கள் தாமதத்திற்குப் பின் இந்த விண்கலம் ஏவப்பட்டது. வழக்கத்தை விட மிக 3 அதிவேகமாக, வெறும் 8 மணி நேர பயணத்தில் இவர்கள் விண்வெளி நிலையத்தை அடைந்து விடுவார்கள். நாசாவின் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க விண்வெளிப் பயணத்தை கமாண்டர் ஜெசிகா வாட்கின்ஸ் தலைமை தாங்கி நடத்துகிறார்.

இக்குழுவில் அமெரிக்காவின் லூக் டெலானி, ரஷியாவின் செர்ஜி டெடெரியாட்னிகோவ் மற்றும் கனடாவின் ஜோசுவா குட்ரிக் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இவர்கள் விண்வெளியில் 6 மாதங்கள் தங்கி ஆய்வுகளை மேற்கொள்வார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com