ஸ்டார்ஷிப் ராக்கெட்டை பிடித்த ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம்: மகத்தான நாள் வந்துவிட்டதாக எலான் மஸ்க் பதிவு

SpaceX Milestone - Elon musk
Published on: 
Summary

எலான் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் நேற்று ஏவிய மேல்பகுதியான ஸ்டார்ஷிப் ராக்கெட்டை, ஏவுதளத்தில் உள்ள இயந்திர கரங்களை பயன்படுத்தி பிடித்து சாதனை படைத்துள்ளது.

அமெரிக்காவில் ஸ்பேஸ்எக்ஸ்-கிற்கு சொந்தமான ஸ்டார்ஷிப் உலகின் மிகப்பெரிய சக்திவாய்ந்த ராக்கெட் அமைப்பாக உள்ளது.

124 மீட்டர் உயரமுள்ள இது, ஒரு பூஸ்டர் ராக்கெட்டின் மீது பொருத்தப்பட்ட விண்கலத்தை கொண்டுள்ளது.

மீண்டும் பிடிக்க திட்டம்

ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் தனது அடித்த சோதனை பயணத்தின்போது, ஏவுதள கோபுரத்தில் உள்ள இயந்திர கரங்களை பயன்படுத்தி தனது பிரமாண்டமான ஸ்டார்ஷிப் ராக்கெட்டின் இரு பகுதிகளையும் பிடிக்கும் என ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனர் எலான் மஸ்க் கடந்த வாரம் தெரிவித்திருந்தார்.

மேலும் இந்த மீட்பு பணியின்போது கீழ்பகுதியான சூப்பர் ஹெவி பூஸ்டர் மற்றும் மேல்பகுதியான ஸ்டார்ஷிப் ராக்கெட் ஆகிய இரண்டையும் மீட்க நிறுவனம் திட்டமிட்டுள்ளதாகவும் எலான் மஸ்க் தெரிவித்திருந்தார்.

மறுபயன்பாடு

ஸ்டார்ஷிப்பை முழுமையாக மறுபயன்பாட்டிற்கு மாற்றுவதே இந்த இரண்டு பாகங்களையும் பிடிப்பதன் நோக்கமாக பார்க்கப்படுகிறது. இதன்மூலம் இது காலப்போக்கில் ஏவுதல் செலவுகளை குறைத்து, ராக்கெட்டுகள் அடிக்கடி பறக்க வழிவகை செய்கிறது.

ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்கள்

அதன்படி நேற்று அமெரிக்காவின் டெக்சாஸில் உள்ள ஸ்டார்பேஸில் இருக்கும் ஆர்பிட்டல் ஏவுதளம் இரண்டில் இருந்து, 26 ஸ்டார்லிங்க் v3 செயற்கைக்கோள்கள் அதிகாலை 4:17 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட்டது.

இதையடுத்து திட்டமிட்டபடி ராக்கெட்டின் இரு பகுதிகளும் பிரிந்து, வெற்றிகரமாக தொடங்கியது. இதைத்தொடர்ந்து ஏவப்பட்ட ஆறரை நிமிடங்களுக்கு பிறகு, ஹெவி பூஸ்டர் மெக்சிகோ வளைகுடா கடலுக்கு மேல்பரப்பில் வெடித்து சிதறியது.

அறிவியல் உலகில் சாதனை

ஆனால் மேல்பகுதியான ஸ்டார்ஷிப் ராக்கெட் சுற்றுப்பாதையில் இருந்ததால், அது மீண்டும் பூமிக்கு திரும்பும்போது, அதை மீட்க ஸ்பேஸ்எக்ஸ் திட்டமிட்டிருந்தது.

இதையடுத்து நேற்று பூமியின் வளிமண்டலத்திற்குள் மேல்பகுதியான ஸ்டார்ஷிப் ராக்கெட் மீண்டும் நுழைந்தபோது, ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் அதனை தனது இயந்திர கரங்களை பயன்படுத்தி பிடித்து சாதனை படைத்துள்ளது.

இதுகுறித்து ஸ்பேஸ்எக்ஸ் செய்தி தொடர்பாளர் டான் ஹூவோட் கூறுகையில், தாங்கள் ஒரு ஸ்டார்ஷிப்பை பிடித்துள்ளதாகவும், இப்போது எல்லாம் மாறுவதாகவும் தெரிவித்துள்ளார்.

எலான் மஸ்க்

இந்த சாதனை குறித்து ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனர் எலான் மஸ்க் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ஸ்பேஸ்எக்ஸின் அபார திறமை வாய்ந்த குழுவினருக்கு நன்றி எனவும் அந்த மகத்தான நாள் வந்துவிட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

X