தென்கொரியாவில் விபத்து: தாறுமாறாக ஓடி 32 வாகனங்கள் மீது மோதிய பேருந்து-57 பேர் படுகாயம்

பேருந்து சாலையின் நடுவில் உள்ள தடுப்புச் சுவரில் மோதி நின்றது.
Bus accident in South korea
Published on: 

தென் கொரிய தலைநகர் சியோலுக்குத் தெற்கே உள்ள சியோங்னாமில் இன்று காலை பயணிகள் பேருந்து ஒன்று கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது.

அப்போது, அந்த பேருந்து ​​போக்குவரத்து சிக்னலில் நின்றுகொண்டிருந்த 32 வாகனங்கள் மீது மோதியது.

பின்னர் சாலையின் நடுவில் உள்ள தடுப்புச் சுவரில் மோதி நின்றது. இதனால் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் அலறியடித்து ஓடினார்கள்.

இந்த விபத்தில் 57 பேர் காயம் அடைந்தனர். அவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.

விபத்து தொடர்பாக டிரைவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது, பேருந்தில் திடீரென பிரேக்குகள் செயலிழந்துவிட்டதாக அவர் தெரிவித்தார்.

X