ரெயில் தண்டவாளங்களில் 'சோலார் பேனல்கள்': சுவிட்சர்லாந்தின் புதிய மின் உற்பத்தி திட்ட வெற்றியால் பிற நாடுகளும் ஆர்வம்

48 தகடுகளும் சேர்ந்து 18 கிலோவாட் மின் உற்பத்தி திறனை கொண்டுள்ளன.
Solar panel in Switzerland
Published on: 

சுவிட்சர்லாந்தில் பயன்பாட்டில் உள்ள ரெயில் தண்டவாளங்களுக்கு இடையே சூரிய ஒளி தகடுகள் அமைத்து மின்சாரம் தயாரிக்கும் முன்னோடி முயற்சி பெரும் வெற்றி அடைந்துள்ளது.

சூரிய ஒளி தகடுகள்

அந்நாட்டின் புட்ஸ் பகுதியில் உள்ள ஒரு ரெயில் பாதையில் 100 மீட்டர் தூரத்திற்கு 48 சூரிய ஒளி தகடுகள் பொருத்தப்பட்டன. உலகிலேயே பயன்பாட்டில் உள்ள ரெயில் பாதையில் அமைக்கப்பட்டுள்ள முதல் கழற்றி பொருத்தும் சூரிய மின் உற்பத்தி நிலையம் இதுவாகும்.

வழக்கமான சூரிய மின் நிலையங்களுக்கு நிலம் வாங்குவதற்கு பதிலாக, ரெயில் தண்டவாளங்களுக்கு இடையே உள்ள சிறிய இடைவெளியை பயன்படுத்தும் எளிய யோசனையில் இது உருவாக்கப்பட்டது.

இதில் பொருத்தப்பட்ட 48 தகடுகளும் சேர்ந்து 18 கிலோவாட் மின் உற்பத்தி திறனை கொண்டுள்ளன. இந்த பகுதியில் இதுவரை 11ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரெயில்கள் கடந்து சென்றுள்ளன.

மணிக்கு 90கி.மீ வேகத்தில் ரெயில்கள் சென்றுள்ள போதிலும், இந்த சூரிய ஒளி தகடுகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாமல் உறுதியாக இயங்கி வருகின்றன.

மேலும், இதன்மூலம் 16 ஆயிரத்திற்கும் அதிகமான கிலோவாட் மின்சாரம் வெற்றிகரமாக உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இது அந்நாட்டின் 3 முதல் 4 வீடுகளின் ஒருவருட மின் தேவையை பூர்த்தி செய்வதற்கு சமமாகும்.

தொழில்நுட்ப பராமரிப்பு

பனிப்பொழிவு மற்றும் திட்டமிடப்பட்ட தொழில்நுட்ப பராமரிப்பு காரணமாக ஒரு மாதம் வரை பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்ட போதிலும், இந்த அமைப்பு சவாலான சூழலிலும் சிறப்பாக செயல்பட்டு தன் திறனை நிரூபித்துள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com