உயிர் பயம்.. ஏர் போர்ஸ் ஒன் விமானத்தில் ஏறுவதுபோல நாடகமாடி உணவு டிரக்கில் ஏறி துருக்கியில் இருந்து ரகசியமாக தப்பிய டிரம்ப்?

ஹைட்ராலிக் வசதி கொண்ட விமான நிலைய உணவு டிரக் மூலம் டிரம்ப் மற்றும் அவரது உதவியாளர்கள் ரகசியமாக வெளியேற்றப்பட்டனர்.
டிரம்ப்
டிரம்ப்
Published on

ஐரோப்பாவின் நேட்டோ கூட்டமைப்பில் உள்ள ஓரே இஸ்லாமிய நாடு துருக்கி. துருக்கியில் கடந்த ஜூலை 7 நேட்டோ வருடாந்திர மாநாட்டில் அமெரிக்க அதிபர் டிரம்ப் கலந்துகொண்டார்.

இதில் பங்கேற்க, கத்தார் பரிசாக வழங்கிய ஏர் போர்ஸ் ஒன் போயிங் 747-8 விமானத்தில் வருகை புரிந்த டிரம்ப் அன்றைய தினம் திரும்பிச் செல்லும்போது அந்த புதிய விமானத்தில் ஏறாமல் தனது பழைய ஏர் போர்ஸ் ஒன் விமானத்தில் ஏறினார்.

புதிய விமானத்தில் வந்திறங்கி, புறப்படும் போது திடீரென பழைய விமானத்திற்கு மாறியது சந்தேகங்களை ஏற்படுத்தியிருந்தது.

இந்நிலையில் அவர் அன்றைய தினம் அந்த பழைய ஏர் போர்ஸ் ஒன் விமானதில் ஏறுவதுபோல் ஊடகங்களை ஏமாற்றிவிட்டு வேறொரு சிறிய ரக ராணுவ விமானத்தில் துருக்கியில் இருந்து டிரம்ப் வெளியேறியதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஈரான் போர் உச்சக்கட்டத்தில் இருந்ததும், தான் படுகொலை செய்யப்படுவோம் என்ற அச்சுறுத்தல் காரணமாகவும் டிரம்ப் இந்த முறையில் ரகசியமாக பயணித்ததாக கூறப்படுகிறது.

தி வாஷிங்டன் போஸ்ட்

'தி வாஷிங்டன் போஸ்ட்' வெளியிட்டுள்ள செய்தியின்படி, துருக்கி தலைநகர் அங்காராவில் நேட்டோ மாநாட்டை முடித்துக்கொண்டு புறப்பட்ட டிரம்ப், கேமராக்களுக்கு முன் தனது பழைய ஏர் போர்ஸ் ஒன் விமானத்தில் ஏறுவது போலக் காண்பிக்கப்பட்டது.

ஆனால், விமானத்திற்குள் சென்ற சில நிமிடங்களில், ஹைட்ராலிக் வசதி கொண்ட விமான நிலைய உணவு டிரக் மூலம் டிரம்ப் மற்றும் அவரது உதவியாளர்கள் ரகசியமாக வெளியேற்றப்பட்டனர்.

அங்கிருந்து அவர் அமெரிக்க ராணுவத்தின் சிறிய C-32A என்ற மாற்று விமானத்திற்கு மாற்றப்பட்டு, இங்கிலாந்தில் RAF Mildenhall விமானத் தளத்திற்கு பாதுகாப்பாக அழைத்துச் செல்லப்பட்டார். அங்கிருந்து அமெரிக்கா சென்றடைந்துள்ளார்.

டிரம்ப் இன்றி பழைய ஏர் போர்ஸ் ஒன் விமானத்தில் பயணித்த பத்திரிகையாளர்கள் மற்றும் சில வெள்ளை மாளிகை ஊழியர்களிடம், விமானத்தின் ஜன்னல் திரைகளை மூடி வைக்குமாறு அறிவுறுத்தப்பட்டது.

விளக்கம்

ஈரான் எல்லையை ஒட்டிய துருக்கிக்கு டிரம்ப் சென்றிருந்த சமயத்தில், ஈரானின் படுகொலை அச்சுறுத்தல் குறித்த நம்பகமான தகவல் அமெரிக்க உளவுத்துறைக்கு கிடைத்ததைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

முன்னதாக, 2000ஆம் ஆண்டில் அப்போதைய அமெரிக்க அதிபர் பில் கிளிண்டன் பாகிஸ்தானுக்கு சென்றபோதும், தனது அதிகாரப்பூர்வ ஏர் போர்ஸ் ஒன் விமானத்தை வைத்து நாடகமாடி பின்னர் அடையாளமற்ற வேறொரு விமானத்தில் பயணித்தது குறிப்பிடத்தக்கது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com