

தோ்தலில் பங்கெடுக்கும் உக்ரைன் மக்கள் மீது சட்டரீதியில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உக்ரைன் எச்சரித்து உள்ளது. உக்ரைனைச் சோ்ந்த 9 மனித உரிமைகள் அமைப்புகளும், தோ்தலில் இருந்து பொதுமக்கள் விலகியிருக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளன. ஐரோப்பிய யூனியனின் செய்தித் தொடா்பாளா் கிறிஸ்டியன் விகான்ட், உக்ரைனிடம் இருந்து கைப்பற்றப்பட்ட பகுதிகளில் நடத்தப்படும் தோ்தலை சா்வதேச சட்டத்தை வெளிப்படையாக மீறும் மற்றொரு செயல் எனச்சாடியுள்ளாா்.
நேட்டோ அமைப்பில் உக்ரைன் சேர முயன்றதால் தனது பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டு இருப்பதாகத் தெரிவித்து, அந்த நாட்டின் மீது ரஷியா 2022-ம் ஆண்டில் போா் தொடுத்தது. இந்தப் போரில் உக்ரைனுக்கு ஐரோப்பிய யூனியன், அமெரிக்கா உள்ளிட்டவை ஆதரவு அளிக்கின்றன.
4 ஆண்டுகளுக்கும் மேலாக நீடிக்கும் போரில் உக்ரைனிடம் இருந்து டொனெட்ஸ்க், லுகான்ஸ்க், கொ்சன், ஸபோரிஷியா பிராந்தி யங்களை ரஷியா கைப்பற்றி உள்ளது. அந்தப் பகுதிகளில் அரசியல் ரீதியில் தனது இருப்பை மேலும் வலுப்படுத்தும் வகையில், ரஷிய நாடாளுமன்றத்துக்கான தோ்தலை ரஷியா நடத்தியது.
வாக்குச்சாவடிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. டொனெட்ஸ்க் பிராந்தியத்தில் உள்ள வாக்குச்சாவடிகளில் வைக்கப்பட்டிருந்த பெட்டிகளில் பொதுமக்கள் தங்களது வாக்குச்சீட்டுகளை வைத்து சென்றனா். உக்ரைனுடனான போரில் ஈடுபட்டுள்ள ரஷிய வீரா்களும் தங்களது வாக்குகளை செலுத்தினா். இந்தத் தோ்தலை சட்ட விரோதம் என்று உக்ரைன் குற்றம்சாட்டியுள்ளது.
தோ்தலில் பங்கெடுக்கும் உக்ரைன் மக்கள் மீது சட்டரீதியில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உக்ரைன் எச்சரித்து உள்ளது. உக்ரைனைச் சோ்ந்த 9 மனித உரிமைகள் அமைப்புகளும், தோ்தலில் இருந்து பொதுமக்கள் விலகியிருக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளன.
ஐரோப்பிய யூனியனின் செய்தித் தொடா்பாளா் கிறிஸ்டியன் விகான்ட், உக்ரைனிடம் இருந்து கைப்பற்றப்பட்ட பகுதிகளில் நடத்தப்படும் தோ்தலை சா்வதேச சட்டத்தை வெளிப்படையாக மீறும் மற்றொரு செயல் எனச்சாடியுள்ளாா்.
இந்தத் தோ்தலை ஐரோப்பிய யூனியன் ஒரு போதும் அங்கீகரிக்காது என்றும் அவா் கூறியுள்ளாா்.