உக்ரைன் மோதல்: இந்தியா எடுத்த முயற்சிக்கு புதின் மாளிகை அளித்த பதில்..!

ரஷியா- உக்ரைன் இடையே அமைதி பேச்சுவார்த்தை ஏற்பட உதவ தயாராக இருப்பதாக இந்தியா அறிவித்துள்ளது.
ரஷிய அதிபர் புதின்- இந்திய பிரதமர் மோடி
ரஷிய அதிபர் புதின்- இந்திய பிரதமர் மோடி
Published on: 

ரஷியா- உக்ரைன் இடையில் கடந்த நான்கரை ஆண்டுகளுக்கு மேலாக போர் நடைபெற்று வருகிறது. இந்த போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்கா பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டது. ஆனால், அமெரிக்காவின் முயற்சிக்கு இதுவரை பலன் கிடைக்காமல் உள்ளது.

இந்தியாவுடன் நல்லுணர்வுடன் ரஷியா இருந்து வரும் நிலையில், புதியை சந்திக்கும்போதெல்லாம் போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான அமைதியான பேச்சுவார்த்தை இரு நாடுகள் முன்னெடுக்க வேண்டும். அதற்கு சாத்தியமான உதவிகளை செய்ய இந்தியா எப்போதும் தயாராக இருக்கிறது என்று இந்திய பிரதமர் வலியுறுத்தி வருகிறார்.

இந்தியாவின் பரிந்துரைகள்

இதற்கிடையே, கருங்கடல் வழியாக கப்பல் போக்குவரத்து சீரான நடைபெறவும், மற்ற எனர்ஜி விசயத்திலும் இந்தியா சாத்தியமான உதவிகளை செய்ய தயாராக இருப்பதாக சில பரிந்துரைகளை செய்துள்ளது. இந்த பரிந்துரைகளை உக்ரைன் மற்றும் ரஷியாவுக்கு அனுப்பியுள்ளது.

உக்ரைன் சொல்வது என்ன?

இதேபோல் துருக்கி, எகிப்து மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளும் பரிந்துரை வழங்கியுள்ளது. இது தொடர்பாக உக்ரைன் வெளியுறவுத்துறை அமைச்சர் அண்ட்ரீ சிபிகா கூறுகையில் "எங்களிடம் நான்கு முன்மொழிவுகள் உள்ளன. அவற்றில் மிகவும் விரிவானது இந்தியாவின் முன்மொழிவாகும். எனர்ஜி மற்றும் கருங்கடல் பகுதி தொடர்பான போர் நிறுத்தத்திற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம். ஆனால், இந்த இரண்டு அம்சங்களும் இணைந்தால் மட்டுமே அது சாத்தியம்" எனத் தெரிவித்துள்ளார்.

ரஷியா சொல்வது என்ன?

இந்த நிலையில் ரஷிய அதிபர் மாளிகையின் செய்தி தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் கூறுகையில் "உக்ரைன் விவகாரத்திற்குத் தீர்வு காண்பதில் சாத்தியமான பங்களிப்பை வழங்க இந்தியா தனது விருப்பத்தை வெளிப்படுத்துகிறது. இத்தகைய தயார்நிலை மற்றும் முன்வைக்கப்படும் கருத்துகளுக்காக எங்கள் இந்திய நண்பர்களுக்கு நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம்" என்றார்.

X

Maalai Malar
www.maalaimalar.com